பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி 123 ) “என்ன? என்று விழித்தான் ராமசாமி, “'நான் உங்கள் அடிமை. ஆமாம். உங்களுக்கு நாள் அடிமை என்று வெடித்துக்கொண்டு சொன்னாள் செல்லம். அடிமையா?”> “ஆம். உங்கள் அன்புக்கு நான் அடிமை; உங்கள் வட் 'சியத்துக்கு அல்ல” என்றாள் செல்லம் . நீ சொல்வது... என்று இழுத்தான் ராமசாமி, “என்னை உங்கள் மனைவியாக நடத்துங்கள்!** என்} கத்தினாள் செல்லம், ராமசாமி ஒரு கணம் திகைத்து உட்கார்ந்திருந்தாள் , மறுகணம் அவனுக்கு ஏதோ உண்மை புலப்பட்ட மாதிரி இருந்தது: “என் லட்சியம் எதிர்காலக் கனவு; செல்லம் கடந்த கால கலாசாரத்தில் உளறிப்போன பாரதப் பெண். இதுவோ நிகழ்கால நடைமுறை. அப்படியானால், நான் இன்றைய நடைமுறைக்குத் தக்கவாறு இறங்கிவர வேண்டுமா? அப்போது தான் செல்லம் முன்னேற முடியுமா? முன்னேறி என்னை எட்டிப் பிடிக்க முடியுமா?...” அன்று முதல் செல்லம் ராமச!: Lி வரும் வரை சாப்பிடு வதும் இல்லை. ராமசாமியும், 'செல்லம் இன்னும் சாப் பிடாமல் இருப்பாளே' என்ற தவிப்போடு நேரத்தோடேயே வீட்டுக்கு வரத் தவறுவதும் இல்லை. 1953