பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம்

  • * தவறி விட்டார்களா?

“ மீண்டும் யோசித்தேன். "இல்லையில்லை. வந்து... என்று இழுத்துப் பேசினார் தாகமுத்து. எனக்கு அதை அழுத்திக் கேட்க மனமில்லை. அடுத்தவ னுடைய அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்வதில் மனித னுக்குள்ள ஆர்வம் அதிகம் தான். ஆனால், அந்த ஆர்வத்தின். விளைவாக ரசாபாசமான எதையாவது கேட்க நேர்ந். தால்---? எனவே நான் அடுத்த கேள்விக்குத் தாவினேன், ' சரி, குழந்தைகள் எத்தனை? முப்பத்திரண்டு! முப்பத்தி இரண்டா? நான் திகைத்தேன், ஆசாமிக்கு சந்தான பாக்யத்துக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது. "இப்படிச் செய லுள்ளவர்களுக்கு எத்தனை பிறந் தால் என்ன? என் போன்ற பத்திரிகாசிரியர்களுக்குப் பிறந்தால் தானே சங்கடம்!.. ஒரு கணம் நின்று **முப்பத்திரண்டா ? என்றேன். 'நாகமுத்து சிரிக்க முடியாமல் சிரித்தார். ஆமாம் சார். மேளகர்த்தா ராகம் முப்பத்திரண்டும் எனக்குக் குழந்தைகள் தான். தோடிதான் எனக்குச் சீமந்த புத்திரன்!” என்று மெதுவாகச் சொன்னார். அப்படி யென்றால், உங்களுக்கு புத்திர பாக்யம் இல்லையா? குரலில் நிருபனின் நிர் விசாரத்தை விழுங்கி, தணிந்த முறையில் கேட்டேன், - அந்த பாக்யம் தான் எனக்கில்லை. நம்பிக்கையும் இல்லை.” நாகமுத்துவின் குரல் தொண்டையில் அடைத்துச் செருகியது. க்ஷேத்திராடனம் பண்ணினாலென்ன?”

  • 'என்னைப் போன்ற நாதஸ்வர வித்வான் போகாத

க்ஷேத்திரங்களா? அது வேறு கதை, சார்.