பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் 63 எனக்கு இந்த ஞானமெல்லாம் தெரியாது, சார். அதெல்லாம் உங்கள் காரியம். எனக்கெதற்கு? ““ சரி விஷயத்தைச் சொல்லுங்கள்.' ஆர்வத்துக்கு அணை கட்ட முடி.41ாமல் துடித்துப் போய்க் கேட்டேன். “ சொல்கிறேன். ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்யாணம். என்னை அழைத்திருந்தார்கள். நானும் சொதையோடு சென்றிருந்தேன், கல்யாண நாளன்று மாலையில் நலங்கு நடந்தது. நலங்குக்கு யாரோ ஒரு பெண் பாட வருவ தாகச் சொன்னார்கள். நன்றாகப் பாடுவாள் என்றும் கேள்விப் பட்டேன். நலங்கில் என்னையும் வாசிக்க வேண்டு மென்றார்கள். சரி என்றேன்.

  • * சாப்பாட்டுக்கு மேல் நலங்கு. அந்தப் பெண் வந்து

சேர்ந்தாள். அவளுக்கும் என் வயது தான் இருக்கும். நல்ல அழகி. பார்த்தவுடனேயே அவள் மீது எனக்கு ஏனோ ஒரு பாசம் தோன்றியது . விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அது தானோ என்னவோ? வந்து உட் கார்ந்தவுடனேயே அவளைப் பார்த்தேன், அவள் அழகு என்னை மயக்கியது என்று சொல்ல முடியாது, வெற்றிலைக் காவியேறிய அவளது உதடுகள் அல்லது எலுமிச்சம் பழம் போன்ற தங்க மயமான முகத்தில் கோமேதகம் போல ஒளி வீசிற்று. அரகஜா சாந்தின் கருமையை, கண்ணின் கருமணிகள் தூக்கி விழுங்கின. எனக்கு உங்களைப் போல் எல்லாம் வர்ணிக்கத் தெரியாது. என்றாலும் அந்தக் களை என்னை வசீகரித்தது.

  • 'என்னையும் ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து

லிட்டு அவள் பாட ஆரம்பித்தாள். இனிய சாரீரம். போன ஜென்மத்தில் அவள் எந்த ஸ்வாமிக்கு தேனாபிஷேகம் பண்ணினாளோ, தெரியாது. கணீரென்ற நாதம் அவள் கண்டத்திலிருந்து பிறந்து வந்தது . முதல் இரண்டு பாட் (திக்கும் நானும் அவள் போக்குப்படியே வாசித்தேன். அவளும் லேசாகச் சிரித்துக் கொண்டே கல்யாணியில் ஒரு பாட்டுப் பாட ஆரம்பித்தாள். காகலி நிஷாதத்தில் அநாயாசமான