பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் "எங்கே இருந்தாலும் இங்கே அ ழைத்து வா என்ற பதம் தான் அது. பல்லவியை இரண்டு தடவை பாடிவிட்டு, என்னைப் பார்த்தாள். நானும் நாதஸ்வரத்தை ஏந்தினேன். மனசிலே ஒரே "உற்சாகம். பல்லவிக்குரிய 'த நிசா நி தமஈம பதந்த பம இது” என்ற சுரத்தை வாசிக்கும்போது சாதாரண காந்தாரத் தில் அழுத்தம் கொடுத்து, உலாவி வந்தேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் பாடினாள். எனக்கு அப்போது தான் அவளோடு' குறும்பாடவேண்டும் என்று மனசில் ஆசை பிய்த்துப் பிடுங்கியது. இரண்டாம் தடவை அவள் பாடிவிட்டதும், நான் வேண்டுமென்றே தாளத்தின் தடையை மாற்றிப் பாட்டை வாசித்தேன். அவளைத் திகைக்க வைக்க வேண்டுமென்பதற்காக, சதுச்ர" நடையிலுள்ள தாளத்திற்கு சங்கீர்ண நடை கொடுத்து அதிலும் கால் இடத்தில் எடுத்தேன். "சபை முழுவதுமே என் பக்கம் திரும்பியது. நான் செய்வது சரியா தப்பா என்பதுபற்றி அவர்களுக்குக் கவலை யிருப்பதாகத் தெரியவில்லை. - அவள் பாட நான் வாசிப்பது நின்றுபோய் இப்போது நான் வாசிக்க அவள் பாடுவது எப்படி இருக்கும் என்பதைக் கவனிக்கத்தான் அவர்கள் திரும்பினர். ஆனால், என் உள்ளத்திலுள்ள தெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? நான் வாசித்து முடித்தேன். அவள் இப்போது சிரிக்கவில்லை. குனிந்து கொண்டே பாட்டை எடுக்க ஆரம்பித்தாள். ஆனால், தாளமிடக் கை வளையவில்லை. மறுகணம் சபையில் அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். "எனக்கு என்னவோ போலிருந்தது. தான் செய்தது தப்பு என்றுகூடப் பட்டது. என்ன பண்ணுவது? பாவம், அவள் பாடுவதே புதிதாயிருக்கலாம். சதையில் குறும்புத் தனம் பண்ணி அவள் பிழைப்பில் மண்ணெ றிந்து விட்டோமோ. என்று சந்தேகம். சில நிமிஷத்தில் அவள் "ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள். நானும்

  1. .மத்தியமாவதியை வாசித்து நலங்கை முடித்தேன். சபையி