பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி பேதம் 67 “அந்தி மயங்கிய பின்னர் நானும் அண்ணாவிடி மாக அங்கு சென்றோம். வீட்டு முன்கூடத்தில் யாருமில்லை. சிறு மண்ணெண்ணெய் விளக்குமட்டும் எரிந்துகொண் டிருந்தது. சுவரில் படங்கள் தொங்கின, என்ன படங் கள் என்று தெளிவாய்த் தெரியவில்லை, யாராவது: வரட்டும் என்று நின்றோம். “ உள்ளே இரண்டு பெண் குரல்கள் பேசிக்கொள்வது கேட்டது. 'அவர் அப்படித் தாள நடையை மாற்றி வாசிப்பார் என்று எனக்கு எப்படித் தெரியும் அம்மா!' என்றது" எனக்குப் பழகிய குரல்,

  • *வேல்சாமி நா தசுரக்காரரின் பிள்ளைதானடி! அல

னுக்கு அப்படி யென்ன அதுக்குள்ளே ஞானம் வந்துடுத்து?" அவன் அப்பா மாதிரி வேறெ! இருந்தாலும், அவர் புள்ளெ தானே! நீ மட்டும் சளைச்சவளா?' என்றது மறு குரல். அது வடிவாம்பாளின் குரலாகத்தான் இருக்க, வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.” "என்ன இருந்தாலும், அவர் கெட்டிக்காரர். சங் கீதம் என்றால்...” என்று ஆரம்பித்தாள் அந்தப்பெண். "அதற்குள் மகாலிங்க அண்ணவி ஒரு 'செருமு' செருமி எங்கள் வருகையைத் தெரிவித்தார். இருவரும். வெளி வந்தனர், அந்தப் பெண்ணும் அவள் தாயும் தான். வந்தார்கள், 'வாங்க வாங்க' என்று வரவேற்றாள் வடிவாம்பாள் ..

  • 'நாங்கள் உட்கார்ந்தோம். அந்தப் பெண் ஒன்றும்

பேசாமல் சேலை முனையைத் திருகித் திருகி விட்டுக்கொண் டிருந்தாள்.

    • நான் தான் பேச ஆரம்பித்தேன், 'இன்று நான்

மிகவும் அசம்பாவிதமாக நடந்து கொண்டேன். உங்கள் பாட்டுக்கு நான் வாசிப்பது என்ற ஒழுங்கை மீறியது என்

  • குற்றம்தான். ரொம்ப வருத்தமாயிருக்கிறது' *'* என்றேன்.