பக்கம்:ரமண மகரிஷி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ரமண மகரிஷி




அப்போது! ‘நான்தான்’ என்றது ஒரு குரல்!

நான் என்றால் உனக்கு என்னவென்று தெரியுமா?

சிறிது நேரம் தயக்கம் மயக்கமானது. அதற்குப் பிறகு, போகட்டும். ‘நான்’ என்பது பற்றிய வினாவை வேதாந்த மகரிஷிகளுக்கு விட்டு விடுங்கள். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் போதும்’ என்றது. அந்தக் குரல்!

என்ன? நேரமும் தூரமும், ஆத்மாவை விட உனக்கு முக்கியமாகி விட்டதா? இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையில்லை. என்றார் ரமணமகரிஷி!

ஆத்மாவைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாமல் எந்த கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ள முடியாது. “ஆத்மாவை முதலில் அறிந்து கொண்டுவா! பின்பு எல்லாம் தெளிவாகத் தெரிந்து விடும்! புரிந்து கொள்ளவும் முடியும்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/100&oldid=1281402" இலிருந்து மீள்விக்கப்பட்டது