பக்கம்:ரமண மகரிஷி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ரமண மகரிஷி


ஏனென்றால் அவனுள் நீ இருக்கிறாய். நீ உன்னை நேசிப்பது போல மற்றவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதன் உட்பொருள் இது.

இதைக் கேட்ட வடநாட்டுக் குழுவினர் மனநிறைவு கொண்டார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மற்றோர் அன்பர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, மரண பயத்தை நீக்கிக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டார்!’ அதற்கு சுவாமி:

மரண பயம் நீங்க மார்க்கம்

அன்பனே! எப்போது உன்னைப் பயம் பற்றிக் கொள்கிறது? கனவு காணும் தூக்கத்தின் போதா? அல்லது மயக்கத்தில் உனது உடலை நீயே காண முடியாத நிலையிலா? என்று சிந்திக்க வேண்டும் நன்றாக நீ விழித்துக் கொண்டிருக்கும் போது தான் சாவு பயம் உன்னைப் பற்றுகிறது. உனது உடலைப் பற்றி நீ நினைக்கும் போது பயப்படுகிறாய்! கனவு இல்லாத தூக்கத்தின் போது, இருப்பது போல் நீ நீயாகவே இருந்து, மற்றவர்களைப் பாராமலிருந்தால் மரண பயம் உன்னைப் பீடிக்காது, அண்டாது.

மறுபிறப்பு மகரிஷி கருத்து

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மறுபிறப்பு பற்றி அறிய விரும்பி ஒரு வினா தொடுத்தார் மகரிஷியிடம்.

‘இறப்புக்கும் - மறுபிறப்புக்கும் இடையில் 50 முதல் 10,000 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்’ என்று கூறப்படுகிறதே ஏன்? என்று அவர் கேட்டார்.

ஒரு விதமான மன விழிப்புத்தன்மைக்கும், மற்றொரு நிலையில் மனோ விழிப்புத் தன்மைக்கும் அளவு கோலாக உள்ளதற்கு எந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/82&oldid=1281265" இலிருந்து மீள்விக்கப்பட்டது