பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். • பெருமானார் இவரிங்ஙனே சொல்லப்பெறுமோ வென்று அத்தை ஸஹியாமல் நல்லார்கள் நண்ணும் திருநாட்டிலே நல்லவமரரோடே ஒருகோவையாக்கி, அவர்கள் நுபவ கைங்கர்யத்தை யிவாக்குண்டா க்கவேணுமென்கிற வ(9) பிஸந்தியை யுடையராயிருக்கிற வாகாரத் தைக்கண்டு, இனிப் பேறு தப்பாதென்றத்யவஸித்து, அர்ச்சிபாதி மார்க்கத்தாலே, தேளவிசேஷத்தேறப்போய், பரமாத்ம ஸத்காரபர் யந்தமான பல பரம்பரைகளை வெண்ணி, அத்தைத் தாம் பெற்றதாக ஹ்ருஷ்டராகிறார். எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம். போம்வழியைத்தருமென்னு மின்பமெல்லாம் புசித்துவழிபோயமுத விரசையாற்றில் நான் மூழ்கி மலமற்றுத் தெளிவிசும்பை நண்ணி நலந்திகழ்மேனி தன்னைப் பெற்றுத் தாமமரர்வந்தெதிர் கொண்டலங்கரித்துச் சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று மாமலராள்கோன் மடியில் வைத்துகக்கும் வாழ்வுநமக் கெதிராச னருளும் வாழ்வே. (உ) பேரம் வழியை = பரமபதத்துக்குப் போயநுபவிக்குமாந்தம் பரிச் சிறோமன்னும்படி நிரவதிகபோக யமான வீர்ச் சிராதிமார்க்கத்தை, தரும்= கொடுக்கும், என்னும் = என்கிற, இன்பமெல்லாம் = அவ்வழியிலுண்டான வின்பமெல்லாம், புசித்து = அநுபவித்து, வழிபோய் = அர்ச்சிராதி மார்க்கத் தால் சென்று, அமுதவிரசையாற்றில் அம்ருதமயமான விரஜா நதியில், நாம்மூழ்கி= தாபத்ரய துக்கங்க ளெல்லாந் தீர நாம் தீர்த்தமாடி, மலமற்று - ப்ராக்ருதங்களான மலங்களெல்லாம் கழிந்து, தெளிவிசும்பை = பரிசுத்த மான பரமபதத்தை, நண்ணி = கிட்டி, நலந்திகழ் மேனிதன்னைப் பெற்று = ஸ்வரூப குணங்களெல்லாம் ப்ரகாசிக்கும்படி Uுத்த ஸத்வ மயமான அப்ராக்ருத திவ்யதேஹத்தைப்பெற்று, அமரர் தாம் = நித்யஸ்ரிகள், வந் து =எழுந்தருளி, எதிர்கொண்டு = ப்ரத்யுத்கதராய், அலங்கரித்து = ப்ரஹ மாலங்காராதிகளாலே யலங்கரித்து, சற்கரிப்ப= ஸத்கரிக்க, (அவர்களுடன் னேகூட) மாமணிமண்டபத்துச்சென்று = திருமாமணி மண்டபத்திலே சென்று, மாமலராள் கோன் = ஸ்ரிய:பதியான ஸ்ரீவைகுண்டநாதன், மடி வில்வைத்துகக்கும் = மடியிலே வைத்து உச்சிமோந்து உகந்தணைக்கும், வாழ்வு = ஸம்பத்து, எதிராசன் = எம்பெருமானார், நமக்கருளும் வாழ்வே