பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். இவ்வுலகிலினியொன்று மெண்ணாதே நெஞ்சே? இரவுபகலெதிராச ரெமக்கினிமேலருளும் அவ்வுலகை யலர்மகள்கோ அங்கிருக்கு மிருப்பை யடியார்கள் குழாங்கடமை யவர்கள் நுபவத்தை இவ்வுயிருமதுக்கிட்டுப் பிறந்திழந்து கிடந்த தென்னுமத்தையென்று மதுக்கிடைச்சுவராய்க்கிடக்கும் வெவ்வினையால் வந்தவுடல் விடும் பொழுதை விட்டால் விளையுமின்பந்தன்னை முற்றும் விடாமலிருந்தெண்ணே. நெஞ்சே = மநஸ்ஸே, இவ்வுலகில் = இந்த லோகத்தில், இளிஒன் றும் = இனியொன்றையும், எண்ணாதே = சிந்தியாதே, இரவு பகல் = இ ராப்பகலும், எதிராசர் = எம்பெருமானார், எமக்கு = நமக்கு, இனிமே லருளும்= இனிமேல் ப்ரஸா திக்கும், அவ்வுலகை=வானுலகான அந்தலோ கத்தையும், அலர்மகள்கோன் = புஷ்பவாஸி.நியான பெரியபிராட்டியார்க்கு வல்லபனான ஸர்வேஸ்வரன், அங்கு = அந்தப் பரமபதத்தில், இருக்குமிரு ப்பை= திவ்யஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளியிருக்குமிருப்பையும், அடியா ர்கள் = நிதயஸ் ரிகளுடைய, குழாங்கள் தமை =ஸமூஹங்களையும், அவர் கள் அநுபவத்தை = அவர்களுடைய ஹர்ஷத்துக்குப்போக்கு விட்ட நுபவிக் கும் அநுபவத்தையும், இவ்வுயிரும்= இந்த அத்மவஸ்துவும், அதுக்கு = அந்த போகத்துக்கு, இட்டுப் பிறந்து = ப்ராப்தனாய் நின்று, இழந்து கிடந் தது = அத்தைப் போக கடித்துக்கொண்டு கிடந்தது, என்னும் ததை = என் று சொல்லுமதையும், என்றும் = எக்காலமும், அதுக் கிடைச்சுவராய்க் கிட க்கும் = அந்த அநுபவத்துக்கு ப்ரதிபாதகமாய்க கிடக்கும், வெவ்வினை யால் = க்ரூரகர்மங்களால், வந்த = உண்டான, உடல் விடும் பொழுதை = தேஹவிமோசநமாகும் காலத்தையும், விட்டால் = அந்ததேஹத்தை விட் டபிறகு, விளையும்= பலிக்கும், இன்பந்தன்னை = நிரதியாரந்தத்தையும், முற்றும் = இந்த ஸமஸ்த விஷயங்களையும், விடாமலிருந்து 4 இடைவிடா மலிருந்து, எண்ணு = சிந்தித்துப்போரு. (வி-ம்.) பந்தமோடிங்க ளிரண்டுக்கும் பொதுவான மநஸ்ஸே! (19353 358:56%) - அத தேஹாவஸாநேச த்யக்த ஸர்வேதாஸ்ப்ருஹா என்கிறபடியே இந்தக் கொடுவுலகில் ஹே யமாயிருப்பதான ப்ரக்ருதிப்ராக்ருதங்க ளெல்லாம் த்யாஜ்யமே ன்று நேரேயறிந்த பின்பு அல்பாஸ்திரத்வாதி தோஷதுஷ்டமா வைவற்றிலேகதோ மும் அங்கீகாரபோக்யமாக விசாரியாதே, எம் பெருமானார் நமக்கு ப்ராப்யருசியையு முண்டாக்கியருளி, (உஎ)