பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ராகுல் சாங்கிருத்யாயன்

டார். அவர்கள் யாக் எனும் காட்டெருமைகள்மீது உப்புமூட்டை களே நேப்பாளத்துக்கு எடுத்துச் சென்று, அங்கே அரிசி அல்லது சோளத்துக்கு பண்டமாற்று செய்தார்கள். ராகுல் தூக்-பா லாமாவை சந்தித்து, அவர் குழுவில் ஒரு உறுப்பினரானர். அவர் களோடு சேர்ந்து பாத்கோசி, தாடபாணி வழியே பிரயாணம் செய்தார். நேப்பாள எல்லைப் பாதுகாவலர் அவரை விசாரணை செய்தார்கள். ராகுல் தன் பெயரை செவாங் என்றும், குன்னுரில் (கின்னர்) பிறந்தவர் என்றும், ராங் என்ற தெய்வ அவதாரமான லாமாவின் சீடர் என்றும் அறிவித்தார். தூக்-பா லாமா தேமாயிலேயே பணிகளில் ஈடுபட்டு, தனது சீடர்களின் காணிக் கைகளைப் பெறுவதில் கருத்தாக இருந்தார். ராகுலுக்கோ திபெத் .ோயாகவேண்டும் என்ற தவிப்பு. அதற்கான "லாம்-சிக் (எல்லை தாண்டிச் செல்வதற்கான அனுமதி) பெறுவது அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அவர் புத்தகயாவில் மங்கோலிய பிக்கு ஒருவரை சந்தித்திருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரை ராகுல் இங்கு காணநேர்ந்தது. அவர் சுலபமாக இரண்டு அனுமதிச் சீட்டுகள் வாங்கிவிட்டார். இந்த மங்கோலிய சந்நியாசியின் பெயர் லோப்ஜத்-ஷெராவ். (அந்தப் பெயரை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் சுமதிப்பிரஞ்ளு என்று ஆகும்.) ராகுல் அவருடைய கனத்தசாமான்மூட்டையை தோள்களில் சுமந்தவாறு அவருடன் சேர்ந்து பயணம் செய்தார். வழியில் அவர்கள் சில கூலிக்காரர்களே நியமித்துக்கொண்டார்கள். ஆனலும் அந்த வழி பத்திரமானது அல்ல. வழிப்பறிக் கள்வர்கள் நிறைந்த பகுதி அது. கொள்ளைக்காரன்போல் தோன்றிய எந்த அந்நியனேக் கண்டா லும், ராகுல் தன் தலையிலிருந்து தொப்பியை எடுத்துவிட்டு, நாக்கை நீட்டி, குச்சி குச்சி (இரக்கம் காட்டுங்கள்) என்று கெஞ்சி, இரண்டு கைகளையும் நீட்டி பிச்சை கேட்டார். பல வியாபாரிகள் லாமாக்கள் போலவும், சந்தியாசிகள் போலவும் தடித்து, மதிப்பு. மிகுந்த பொருள்களை எடுத்துச்சென்ருர்கள். பொதுவாக அங்கே கொள்ளைக்காரர்க்ள் முதலில் பயணிகளைக் கொன்றுவிடுவார்கள்; அப்புறம்தான் அவர்களது உடைமைகளைச் சோதனையிடுவார்கள். அதிர்ஷ்டவசமாக, அவர் பனிக்கட்டி போல் குளிர்ந்த கோசி நதியின் நீரைக் கடந்து ஷேகர் என்ற இடம் சேர்ந்தார். அங்கே லார்ச்சே வரை மூட்டைகளைச் சுமந்து செல்வதற்குச் சில கழுதைகள் அவருக்குக் கிடைத்தன. பிரம்மபுத்திரா நதிக்கரைமீது மெதுவாகப் பயணம் செய்து, ஒரு மட்டக் குதிரையில் சவாரி செய்து நார்தாங் அடைந்தார் அங்குள்ள மடத்தில், பதினென்ரும் நூற்ருண்டைச் சேர்ந்த 338 நூல்கள் இருந்தன. அனைத்தும் திபெத் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த இந்திய நூல்களாகும். பிறகு அவர் டாஷி