பக்கம்:ராஜாம்பாள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இராஜாம்பாள்

காகத்தான் இப்படிப் பேசுகிருளென்று அதுவரையில் நான் உணராமல் இருந்தது எனக்கே ஆச்சரியமா, இருந்தது. யோசித்துப் பார்க்கையில், ஆதிமுதலே அவன் என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணங் கொண்டிருந்ததால்தான் அவள் விதவையாடு ருந்தாலும் தன்னை மறுகல்யாணஞ் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டு வந்து கேட்ட அநேக கனவான்களையும் மறுத்துவிட்டாள். அவளுக்கு எப்படி மறுமொழி சொல் வது என்று அறியாமல் கொஞ்சநேரம் சும்மா இருந்தேன், அப்பால் எப்படியாவது சொல்வித் தீரவேண்டியதுதானே’ என்று, லோகசுந்தரி! நீ சொன்ன வார்த்தைகள் நினைக்க நினைக்க எனக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றன. ஏனென்றால், உன்னை ஆதிமுதலே என் தங்கையாகப் பாவித்து உன்ன்ே நேசித்து வந்தேனே தவிர வேறுவிதமாக நான் நேசிக்கவில்லை. அப்படி இருக்க உன்னை நான் கல்யாணஞ் செய்துகொள்வது கூடாத காரியமாகையால், இந்த விஷயத்தைக் குறித்து நீ என்னிடம் பேசினதையும், நான் உனக்கு மறுத்து மறுமொழி சொன்னதையும் கன வாக நினைத்து மறந்துவிடு. ஏனென்றால், எப்போது என் இருதயத்தை ராஜாம்பாளுக்கு ஒப்பித்துவிட் டேனே அதை மாற்றி உனக்கு ஒப்பிப்பது முடியாத காரியம்’ என்று சொன்னேன்.

அதற்கு அவள், ‘இப்போது ராஜாம்பாள்தான் நீலமேக சாஸ்திரியைக் கல்யாணஞ் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டுவிட்டாளே ! அப்படி இருக்க இன்னும் அவளை நினைத்துக்கொண் டிருப்பதில் உபயோகமென்ன?” என்று கேட்டாள். அதற்கு நான், அவள் நீலமேக சாஸ்திரியைக் கல்யாணஞ் செய்துகொண்டால் நான் கல்யாணமில்லாமல் பிரம்மசாரியாயிருப்பேனே தவிர வேறு யாரையுங் கல்யாணஞ் செய்துகொள்ளமாட்டேன் என்றும், அந்த விஷ்யத்தைக் குறித்து இனிப் பேசுவது வியர்த்தமென்றும் கண்டிப்பாய்ச் சொன்னவுடனே வேரறுந்த மரம் சாய்வதுபோல் மூச்சுப் பேச்சில்லாமல் கீழே விழுந்துவிட்டாள். . - உடனே ஒடிப்போய் வேலைக்காரியைக் கூட்டி

வரலாமென்று வெளியே போகப் பார்த்தேன். கதவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/100&oldid=684642" இலிருந்து மீள்விக்கப்பட்டது