பக்கம்:ராஜாம்பாள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை | 17 -

தான் மரணம் சம்பவித்திருக்கும் என்று ஆய்ந்தோய்ந்து பாராமல் தீர்மானஞ் செய்துவிட்டார்போல் இருக்கிறது.

மணவாள நாயுடு: உடம்பெல்லாம் நெருப்பால் கொளுத்தப்பட்டிருந்ததால் துப்பாக்கியின் காயமென்று நான் நினைக்கவில்லை.

” தொக்கு துரை: சரி, எப்படியாவது இருக்கட்டும். மரணம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்றும், எத் தன காயங்கள் உடம் பில் இருந்தன என்றும் விவரமாய்ச் சொல்லுங்கள்,

காவன்ன துரை: துப்பாக்கியின் காயமொன்று, கட் டாரியின் காயம் ஒன்று, ஆக இரண்டு காயங்கள் இருந் தன. இந்தக் காயங்களைத் தவிரப் பாஷாணமும் சாப்பிட் டிருக்கவேண்டும். -

பா. கொக்கு துரை: நீர் சொல்லுவது ஆச்சரியத் தைக் கொடுக்கிறதே! இறந்தபின் பாஷாணம் ஊற்றப் பட்டிருக்கிறதா? அல்லது உயிருடன் இருந்தபோதே பாஷாணம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ?

காவன்கு துரை: உயிருடன் இருந்தபோதே பாஷா ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பா. கொக்கு துரை: இறந்தபின் நெருப்பால் கொளுத்தினர்களா? அல்லது உயிருடன் இருந்தபோது கல்நெஞ் சர் கொளுத்தினர்களா?

காவன்கு துரை: இறந்த பிற்பாடுதான் கொளுத்தி யிருக்கிறது.

கோர்ட்டார்: ஐயங்காரவர்களே, தாங்கள் ஏதாவது கேள்விகள் கேட்பதாயிருந்தால் கேட்கலாம்.

இவ்வாறு சொன்னவுடனே, இவரையும் விவரமாய் விசாரிக்கவேண்டும். கோவிந்தன்’ என்று எழுதிய சீட்டை, துரைசாமி ஐயங்காரிடம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கிழவன் கொடுத்தான். -

துரைசாமி ஐயங்கார்: மிஸ்டர் காவன்ன துரையவர் களே, தாங்கள் பிரேதத்தின் உடம்பில் கட்டாசியின் குத்தாலும், துப்பாக்கியின் குண்டினலும் ஏற்பட்ட காயங்கள் இருந்தன என்றும், இவை இரண்டைத் தவிர, பாஷாணமுங் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/121&oldid=684663" இலிருந்து மீள்விக்கப்பட்டது