பக்கம்:ராஜாம்பாள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்க்கிழவி 47

ஆயிற்று என்றும், ஜெயிலிலிருந்து விடுதலை அடைந்த வுடனே நாயுடு மறுபடியும் பாலாம்பாள் வீட்டிற்குப் போனரென்றும், அவரைக் கண்டு பாலாம்பாள் ஒரு பேச்சுக்கூடப் பேசாமல் தாய்க்கிழவியை விட்டு நாயுடு அங்கே வந்தால், நடேச சாஸ்திரிகள் கோபித்துக்கொள் ளுவாரென்றும் ஆகையால் நாயுடுவை, அவர் அந்தள்: துக்குத் தக்க இடத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இனி அந்த இடம் வருவது அவருக்குத் தகாதென் றும் சொல்லச் சொன்னதாகவும், அதைக் கேட்டவுடனே நீாயுடுவுக்கு மிகுந்த கோபம் உண்டாகி, உன்னே என்ன குதி செய்கிறேன் பார் ! என்று பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் தெரியவந்தது.

ஷோக் நரசிம்மலு நாயுடு ஜெயிலுக்குப் போன சில தினங்களுக்கு அப்பால் ஒரு நாள் நடேச சாஸ்திரி செங் கான் கடைப் பந்தலில் உள்ள ஆட்டக் கொட்டகைக்கு நாடகம் பார்க்கப் போயிருந்ததாகவும், அவர் போய் ஒரு தனிச் சோபாவில் உட்கார்ந்ததாகவும், அன்று ஆட்டத் திற்கு வந்திருந்த பாலாம்பாளும் அவர் உட்கார்ந்திருந்த சோபாவிற்குப் பக்கத்துச் சோபாவில் வந்து உட்கார்ந்த தாகவும், நாடகம் நடந்துகொண் டிருக்கும்போது நாட கத்தின் குளுதுபவங்களைக் குறித்து முதலில் இருவரும் பேசினர்களென்றும், அப்பால் பாலாம்பாள் சாஸ்திரி களைத் தன் சோடாவில் வந்து உட்காரும்படி சொல்லி அவருக்கு வெற்றிலே மடித்துக் கொடுத்துக்கொண்டே பேசிக்கொண் டிருந்ததாகவும், நாடகம் முடிந்தவுடனே நடேச சாஸ்திரிகள் தம் வீட்டிற்குப் போகாமல், பாலாம் பாள் வீடு சமீபத்தில் இருந்ததால் அங்கேயே போய்ப்படுத் துக்கொண்டதாகவும், அது முதல் லோகசுந்தரியின் தந்தி வந்தவரையில் பாலாம்பாளின் வார்த்தைக்கு மறு பேச்சுப் பேசாமல் இருந்ததாகவும் தெரியவந்தது. தாசிகள் தம் வீட்டிற்கு வரும் புருஷர் பேரிலெல்லாம் பிரியமாக இருப்ப தாய் நடிப்பது சகஜமாயிற்றே ! அப்படி இல்லாமல் பாலாம்பாள் நடேச் சாஸ்திரிகள் பேரில் வாஸ்தவமான பிரியத்தை வைத்திருந்தாளென்பதையும், நடேச சாஸ்திரி சொத்துக்காரரா யில்லாமல் இருந்தாலும் ஷோக் நரசிம் மலு நாயுடுவை ஒட்டினதுபோல் ஒட்டிவிடாமல் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/151&oldid=684693" இலிருந்து மீள்விக்கப்பட்டது