பக்கம்:ராஜாம்பாள்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 183

இப்படிச் சொல்லிப் பக்கத்தில் வாரன்டு வைத்துக் காத்துக்கொண் டி ருந்த இரண்டு கான்ஸ்டேபில்களையும் கூப்பிட்டு நடேச சாஸ்திரியையும் லோகசுந்தரியையும் பிடித்துக்கொண்டு போகும்படி சொன்னர்.

அன்று ராத்திரி எட்டு மணிக்குத் துரைசாமி ஐயங் காரவர்களும் மணவாள நாயுடுவும் சாமிநாத சாஸ்திரி களும் கோபாலனும் இராஜாம்பாளும் ஒன்று சேர்ந்து கோவிந்தன் எப்படி இராஜாம்பாள் உயிருடன் இருக்கிரு ளென்று தெரிந்து அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தாரென்பதையும், கொலை செய்யப்பட்டது தாசி பாலாம்பாளென்றும் கொலை செய்தவர்கள் நடேசனும் ஷோக் நரசிம்மலு நாயுடுவும் லோகசுந்த்ரியுமென்றும் கண்டு பிடித்த விவரங்களைச் சொல்லவேண்டுமென்றும் வேண்டிக்கொண்டார்கள். அவரும் சொல்வதாகச் சம்மதித்துப் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தார்.

14. கோவிந்தன் விவரித்துச் சொல்லல்

கோவிந்தன் கொலை செய்யப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்தவுடனே அங்கே அபூர்வமாகிய மஞ்சள் ரோஜாப் புஷ்பத்தின் ஐந்து இதழ்கள் சிந்திக் கிடந்தன. அவைகளைக் கண்டவுடனே மஞ்சள் ரோஜாப் புஷ்பம் காஞ்சீபுரத்திலாவது காஞ்சீபுரத்திற்குச் சமீபமாயுள்ள ஊர்களிலாவது கிடையாது என்று எனக்குத் திட்ட மாய்த் தெரியுமாதலால், கொஞ்ச தூரத்திலுள்ள ஊரி லிருந்து அந்தப் புஷ்பத்தை வைத்துக்கொண்டு வந்த யாரோ ஒருவர் கொலை செய்திருக்கவேண்டும்; அல்லது கொலை செய்வதற்கு ஒத்தாசையாவது செய்திருக்க வேண்டுமென்றும் அது இன்னரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றும் எழுதிக்கொண்டேன். அப்பால் உங்கள் யாருக்குந் தெரியாமல் கொலை செய்யப்பட்ட பிரேதத்தைப் போய் பார்த்தேன். பிரேதத்தைக் கண்ட, வுடனே கட்டாரியின் குத்தால் மாத்திரம் இறக்க வில்லையென்றும், துப்பாக்கியின் குண்டும் பாய்ந்திருக் கிறதென்றும் தெரிந்து, இரண்டு பேராவது கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/187&oldid=684729" இருந்து மீள்விக்கப்பட்டது