பக்கம்:ராஜாம்பாள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரீ புருஷ சம்பாஷணை 1.

5

சாமிநாத சாஸ்திரி வாஸ்தவந்தான். கல்யானஞ் செய்ய ஏற்பாடுகள் என்ன என்ன செய்வதென்று யோசித் துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கனகவல்லி: நம் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை பல்லவா முதலில் தீர்மானஞ்செய்யவேண்டும்? ஏற்பாடுக ளெல்லாம் அரை நொடியில் நான் செய்துவிடமாட் டேனே? அரிசி குத்தித் தயாராய் நூறு மூட்டை அடுக்கி இருக்கிறேன். பருப்பு தினுசுகளெல்லாம் நன்றாய்க் குத்தி மாசு மறு இல்லாமல் பொறுக்கி வைத்திருக்கிறேன். சாமான்கள்தாம் நமது அகத்தில் இப்போதே தயாரா யிருக்கின்றனவே. -

சாமிநாத சாஸ்திரி : மாப்பிள்ளை விஷயத்தைக் குறித்துத் தீர்மானஞ் செய்வது என்ன இருக்கிறது? நமது பக்கத்து அகத்து நடேச தீட்சிதர் பிள்ளே கோபாலன் நிரம்பப் புத்திசாலி ; நன்றாய்ப் படித்தவன்; பி. ஏ. பரீட்சை கொடுத்தவன். பிதுரார்ஜித சொத்து இருக்கிறது. இதுவரையில் யாதொரு துர்நடத்தையுஞ் செய்ததாக நாம் கேள்விப்படவில்லை. இந்த ஊரிலேயே அவனிடம் பிரியமில்லாதவர்கள் இல்லை. எல்லாவற்றிலும் முக்கியமாகக் கோபாலனுக்கு நம் ராஜத்தின்பேரில் அதிகம் பிரியம். ராஜத்திற்கும் அவன்பேரில் பிரீதி அதிகம். இருவரையும் பார்த்தால் சாகடிாத் மகா விஷ்ணுவும் லட்சுமியும்போல் இருக்கிரு.ர்கள். இப்படி இருக்க மாப்பிள்ளே தீர்மானஞ் செய்யவேண்டுமென்று நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

கனகவல்லி: ஆலுைம் என்ன உங்களுக்குப் புத்தி வரவர இப்படிப் போகிறது? உங்களுடைய சொந்தப் பிள்ளைக்கு மேலாய் நடேசனை வளர்த்தீர்கள். ஏதோ பரீட்சையில் தேறவில்லை என்பீர்கள்போல் இருக்கிறது. இந்தக் காலத்தில் பரீட்சையில் தேறுவதெல்லாம் அதிருஷ் உந்தான். மேலும் பரீட்சையில் தேறியவர்கள்தாமா நன்றாய்ச் சம்பாத்தியஞ் செய்கிரு.ர்கள்? அநேகர் பி. ஏ. பரீட்சை கொடுத்துவிட்டுக் கலெக்டர் ஆபீஸில் அட் டெண்டர் வேலைக்கு மண்டி போடுகிறார்களே அதெல் லாம் உங்களுக்குத் தெரியாதா? நடேசனுக்கும் கோபால னுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/19&oldid=677385" இலிருந்து மீள்விக்கப்பட்டது