பக்கம்:ராஜாம்பாள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3:0 இராஜாம்டாள்

யாராவது அபினித் திராவகம் வாங்கினர்களா என்று விசாரித்ததில், பல் வலிக்காக லோகசுந்தரி மூன்று கடை களில் அபினித் திராவகம் வாங்கி யிருப்பதாகத் தெரிந்து கொண்டேன். உடனே காஞ்சீபுரத்தில் கொலைசெய்யப் பட்டவள் பாலாம்பாள்தான் என்று நிச்சயித்துக்கொண்டு அவளுக்கு விரோதி யாராவது இருக்கிறார்களா என்று கேட்டதில் ஷோக் நரசிம்மலு நாயுடுதான் விரோதியென்று தெரிய வந்தது. ‘ந’ என்னும் எழுத்தை ஒரு மூலையில் எழுதப்பட்ட கைக்குட்டை சுடலைமாடன் கோவில் தெரு, 29-ம் நெம்பர் வீட்டிலுள்ள குதிவில் கிடந்த தால், நரசிம்மலு நாயுடு பாலாம்பாளைக் கொல்லுவதற் காக அவள் பின்னலேயே போயிருக்கலா மென்றும், அங்கே கொல்லுவதற்குச் சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நடேச சாஸ்திரி ராஜாம்பாளைக் கொண்டு வந்து குதிவில் வைத்துவிட்டு வெளியே போன உடனே ராஜாம்பாளே விடுதலை செய்வதற்காகக் காத் துக்கொண்டிருந்த பாலாம்பாள் மெதுவாகப் போயிருக்க லாமென்றும், அப்போது நரசிம்மலு நாயுடு கட்டாரியால் குத்தியிருக்கலாமென்றும், அதே சமயத்தில் நாம் உள்ளே விட்டு விட்டு வந்த ராஜாம்பாள் வெளியே வந்துவிட்டாள் என்ற எண்ணத்துடன் நடேச சாஸ்திரி துப்பாக்கியால் சுட்டிருக்கலாமென்றும் ஊகித்தேன். நடேச சாஸ்திரிக னிடம் இருக்கும் கைத்துப்பாக்கியின் குண்டும் பாலாம் பாளேச் சுட்ட குண்டும் ஒரே மாதிரியானதாலும், நடேச சாஸ்திரி அந்தச் சமயத்தில் அங்கே இருந்திருப்பதாலும் அவர்தாம் சுட்டிருப்பாரென்பதற்குக் கிஞ்சித்தேனும் சந்தேகமில்லை. ஆகவே பாலாம்பாளைக் கொன்ற மூன்று பேர்கள் இன்னுரென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. ராஜாம்பாள் எங்கே அடைக்கப்பட்டிருக்கிருளென்ற சமாசாரம் மாத்திரம் எனக்குத் தெரியவில்லை. -

அன்று முதல் மாறு வேஷம் போட்டுக்கொண்டு ஷோக் நரசிம்மலு நாயுடு எங்கே போகிருனே அங்கெல் லாம் அவனுடனேயே திரிய ஆரம்பித்தேன். வேலூருக்குப் போய் மோட்டார் வண்டி ஒட்டுகிறவனைக் கண்டுபிடித்து வரும்படி எனக்கு நம்பிக்கையுள்ள ஒருவனை அனுப்பிக் கண்டுபிடிக்க முயன்றதில் அவன் அகப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/194&oldid=684736" இலிருந்து மீள்விக்கப்பட்டது