பக்கம்:ராஜாம்பாள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இராஜாம்பாள்

செய்தார்களென்று மாறிவிடுவார்கள். என்னைப்போன்ற வர்கள் போய்ச் சொன்னல் ஆட்கள் அந்தஸ்துக்குத் தகுந்தபடி தொகை பேசிக்கொண்டு வேண்டிய ஏற்பாடு செய்துவிடுவார்கள். -

நீலமேக சாஸ்திரி; நீ சொல்வது நியாயந்தான் என் அந்தஸ்துக்கு அவனிடம் இப்படிச் செய் என்று நான் சோல்லக்கூடாது. சொல்லியும் ஒருவேளை மறுத்த்ால் அது மிகவும் கேவலமாக இருக்கும். சாமிநாத சாஸ் திரியை அடைத்துவைக்க என்ன கேட்பான்?

ராமண்ணு: தங்களுக்குத் தெரியாதது என்ன இருக் கிறது: லஞ்சம் வாங்குகிறவர்கள் அந்தஸ்தின்பேரில்தான்ே வாங்குவார்கள்? ஏன், தங்களுக்குத் தெரியாதோ? பண்டார சந்நிதிகளைப் போலொத்தவர்கள் ஏதாவது அற்பக் குற்றஞ் செய்துவிட்டாலும் இருப்தாயிரம் முப்பு தாயிரமென்று சப் மாஜிஸ்டிரேட்டுகள் வாங்கிக்கொண்டு நியாயம் எந்தப் பக்கத்திலிருந்தாலும் விட்டுவிடுவது சகஜம். என்னைப்போலொத்தவன் அதே குற்றஞ்செய் தால் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார் கள். சாமிநாத சாஸ்திரி அதிகச் சொத்துக்காரரானபடி பால் குறைந்தது பதியிைரம் ரூபாய் கொடுக்காவிட்டால் மணவாள நாயுடு சம்மதிக்கமாட்டார்.

நீலமேக சாஸ்திரி: அழுவதெல்லாம் அழுதுதானே தொலைக்கவேண்டும்? இதோ, கொண்டு போ; எப்படி யாவது காரியத்தை முடித்துவிடு; முடியவில்லை என்று வந்து சொல்லாதே.

ராமண்ணு: கொடுப்பதைச் சந்தோஷமாய்க் கொடுங் கள். கல்யாண காரியமாயிற்றே. -

இவ்வாறு சொல்லிவிட்டுச் சாஸ்திரிகளிடம் விடை பெற்றுக்கொண்டு ஐயாயிர ரூபாயை வீட்டில் புதைத்து வைத்துவிட்டு, ஐயாயிர ரூபாயை எடுத்துக்கொண்டு மணவாள நாயுடு வீட்டுக்குப் போய் அவரைக் கண்டு ஆசீர்வாதஞ்செய்து பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.

ஏதாவது வேலையிருந்தால் மாத்திரம் ராமண்ணு இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடுவிடம் வருவாராதலால், கணவாள நாயுடு தம் பக்கத்திலிருந்தவர்களை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/46&oldid=677412" இருந்து மீள்விக்கப்பட்டது