22
22 செய்து வீட்டுக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொள்கிறோம். கல்யாணத்துக்கு நிச்சயமாக பிடிவாதம் செய்யமாட்டோம். உன்னைக் காணாமல் மிகவும் நொந்து போயிருக்கிறோம். உடனே வரவும். ஊம். லீலா... உன் அன்புள்ள, அப்பா. "உனக்கு இஷ்டம் ஏற்படுகிறபோது நீயே கல்யாணத்தை முடிவு செய்து கொள்ளலாம். என்னையும் உன் அருமைத் தாயாரையும், ஏராளமான சொத்துக்களையும் விட்டுவீட்டு...' ராஜா: ஓகோ! பெரிய பணக்கார வீட்டு பொண்ணுபோல இருக்கு. சே, சே! நம்ம நினைச்சமாதிரி தப்பான பொண்ணல்ல, ஹம்... (உடனே உள்ளே ஓடிப்போய் ராணிக்கு தலையணை தருகிறான். அட்டே, அம்மா. இதோ பாருங்க, கொஞ்சம் எழுந் திருங்க இதோ. அம்மா. ஹ...மெல்ல, மெல்ல, அய்யய்யோ, பரவாயில்லை. [பிறகு அறைக்கு வெளியே சென்று தூங்குகிறான். பொழுது விடிந்ததும் வேலைக்காரன் காப்பி கொண்டு வருகிறான்.) வேலை: சார்! சார்! மணி ஒன்பதரை ஆகுது சார், எழுந்திருங்க சார். சா...! (போர்வைவை விளக்க ராணி யைப் பார்த்து)... யாரு? (வெளியில் ஓடி ராஜாவின் மேல் விழுகிறான்.) ராஜா: டேய். டேய் யார்ரா அவன்? வேலை: சாள். சார். நான்தான் சார்! ' ராஜா: நீயா? ஏண்டா இப்படி மேலே வந்து விழுந்தே? வேலை: சார் அது யார் சார் அது? ராத்திரி ட்ராமா விலே :ஆக்ட் பண்ணினவங்களா? (ராணி விழித்துப் பேசுவதை கவனிக்கிறாள்.) ராஜா: கழுதை, அதுக்காகவா இப்படி ஓடிவந்தே? அது பெரிய எடத்துப் பொண்ணுடா! பேரு லீலா! அவுங்க அம்மா அப்பா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வீட்டை விட்டு வந் துடுச்சு! வேலை: என்ன சார் கோபம்? ராஜா: அட, எனக்கென்னடா தெரியும்? நான் பத்திரி கையிலே படிச்சேன். வேலை : ரெம்ப அளகான பொண்ணு சார்! ராஜா : ஆ...!