52
கார்யத்தோடவா நடக்குது? அதுமாதிரி ஏதோ... சண்டைக்கு வந்தான்: செமித்தியா வாங்கிகிட்டு போனான்) ராணி: நீங்களா அடிச்சீங்க? ராசா: ஊம்.. நான் அடிப்பனா? நான் அடிச்சா அவன் தாங்குவானா? உடஞ்சிட மாட்டான்...என்னை காப்பாத்துரதுக் காக ஒரு பையன் ஓடிவந்தான்... ஆ...அடிச்சான் பாரு.. அடின்னா அடி. ஒங்க ஊட்டு அடி...எங்க ஊட்டு அடில்ல... அப்படி அடிச்சான்| உம்- கர: அடேயப்பா! பெரிய பயில்வான் போலிருக்கு! ராசா: உம் பையன்... சின்னப் பையன். ஆனா: அந்தப் பையனைப் பார்த்தா பொம்பளைன்னுதான் சொல்லணும், லீலா! ராணி: (திடுக்கிட்டு) என்னாது? ராசா: ஆமாம். அவ்வளவு எளகிய மனசு... அவ்வளவு எளகிய மனசு! பாவம், அந்தப் பையனுக்கு, ஒரு வயசான குருட்டுத் தகப்பனாரு-- குடும்பப்பொறுப்பு பூரா அந்தப்பை யன் தலைமேலேதான் போல இருக்கு! கர: நல்லவேளை, கடைசி காலத்திலே அந்தக் குருட்டுக் கிழவனுக்கு உபகாரம் செய்ய, ஒரு ஆம்பளைப் பையனாவது பிறந்தானே.. அதும் பெண்ணா பிறக்காம்! ராசா: ஏன்டா, பொண்ணாப் பொறந்தா என்னா? பெண் கள்ளேயே பெரிய பெரிய ராணி எல்லாம் இல்லியா...ஏன் லீலா? ராணி, ஆமாம்! ராசா ஜான்ஸி ராணி. அந்த ராணி... இந்த ராணி... ராணி: இந்தா கரண்ட் நாலுரேடியோ வேணும்னு ஆடர் வந்துதே, அதெல்லாம் எடுத்துக்கொண்ட கொடுத்தாச்சா? கர: ஓ குடுத்தாச்சி! ராசா: ஆகார்...ரேடியோன்னோன்ன எனக்கு ஞாபகம் வந்தது. லீலா, அந்தப் பையன் செய்த உபகாரத்துக்காக அவனுக்குக்கூட ஒருரேடியோ பிரசண்டேஷன் செய்யலாம்னு இருக்கிறேன்! ராணி: கொடுக்க வேண்டியதுதான்... ராசா; என்ன லீலா, டைம் ஆயிடுச்சா? புறப்பட்டுட் டீயா? வா, வா. நான்கூட வர்ரேன்!
m (ராசா, ராணியைக் கொண்டுவந்து விடுகிறான். அவன் போனதும், ராணி வெளியே வர எத்தனிக்கும்போது எதிரே பாபு நிற்கிறான்.) பாபு: யாரது? ராணியா? ராணி; ம்..ஆமாம்! பாபு: ஹ...ஹேய்!... நாடகத்திலே டேன்னு என்கிட்ட சொன்னீல்ல.. நீ? நடிக்கவே மாட்