58
58 என்னா தெரியும்? திருட்டும், புரட்டும் நிறைஞ்ச உலகத்திலே- ஒரு குருட்டுத் தகப்பனாரோட வாழும் அபலைக்கு எவ்வளவு துயரங்கள் தெரியுமா? அப்பப்பா? அந்த சமரசம் வீடு... அங்கே ... ஒரு பாலி... பாபு! இன்னொரு காளி சாந்தம்! ராஜா: ஆகா போதும்... போதும்! நீ ஒவ்வொருத்தவங் களா திட்டி கடைசியிலே என்னையும் திட்ட ஆரம்பிச்சுடாதே! ஒன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும் - நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். ராணி: இந்தப் பொல்லாத உலகத்திலே நேர்மையோட நடக்கிற ஒரு பொண்ணுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கு தெரி யுமா? அடுக்கடுக்காய் படை எடுத்து வரும் இடையூறுகளை எதிர்ப்பதற்கு, பொய் ஒரு ஆயுதமாக இருந்தால், அதை உப யோகிப்பது குற்றமா என்ன? ராசா: நான் குற்றம்னு சொல்லலே-நல்ல காரியத்துக்கு பொய் சொல்றது தப்பு இல்லேதான்... இருந்தாலும் என் கிட்ட சொல்லி இருக்கக்கூடாது! அதான் 'பாயிண்ட்!' ராணி: ஆமா... ஆமா... நீங்க முதலாளில்ல? ராஜா: அய்யய்யோ! நீ என்னம்மா இது டேஞ்சர் பண்றே? அதெல்லாம் மொதலாளி கிதலாளி ஒண்ணும் கிடையாது; வெறும் ராஜாதான்...! ராணி. ஒங்ககிட்ட சொன்னா என்னா? - ராசா: இப்படி கேட்டா நான் என்ன சொல்லப்போ றேன்: காதலன் கிட்டே பொய் சொல்லலாமான்னேன்- வேற என்னா? அது இருக்கட்டும் ராணி, ஆயிரம் பொய் சொல்லியா வது ஒரு கல்யாணத்தை செஞ்சிவையுன்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. நீ இது வரைக்கும் சுமார் ஆயிரம் பொய் மேலேயே சொல்லி இருப்பேன்னு நினைக்கிறேன். மிக்கு அதனால் ராணி: அதனால்.. ராஜா; அதனால் என்ன இப்ப... அதனால ஒண்ணுமில்லே. நான் என்னத்தைச் சொல்லறது1 $ இதுவரைக்கும் லீலா ராணி -வீலா ராணின்னு இருந்தேன்! இனிமே ராஜா ராணி ஆயிடலா மேங்கிறேன்! சமையல்காரன்: ஏம்மர்? இப்படி கவலையா கீங்க? கொஞ்சம் காப்பியாவது சாப்பிடுங்கம்மா! இருக் சாந்தம்: அடந் போப்பா நீ 1 முருகா - இப்படி வா- இப் படி உக்காரு! அந்தப் பொண்ணு விவரம் சொன்னியே... சகடம்: ஓ அது ரொம்ப மிஞ்சிப் போச்சே.. இப்ப கல்யா ணத்துக்கே ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கே...