பக்கம்:ரூபாவதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வருவதற்குள் இவர்கள் வாாாமற்போகிரு.ர்களா? மேலும் தஞ்சைக் குக் கருவூர் சமீபமன்ரு ? சுசீலன் :-ஆம். சமீபத்தான். ஆலுைம் ஒருவேளை நம்முடைய கருவூர்ப் போர்வீரர் வருகிறதற்குமுன் சோழன் படையொடு வந்துவிட்டா லென்ன செய்கிறது ? அதையும் நாம் யோசிக்கவேண்டும். சூரசேகன் :-ர்ே சொல்லுவது சரிதான். ஆனல் இவர்கள் வருகிறதற்குமுன்

அவன் வரக்கூடுமோ ? சுசீலன் :-ஏன் வாக்கூடாது? என்னவோ? யார் கண்டார்கள் ? எல்லாவற்

றிற்கும் நம்முடைய வெளிநாட்டொற்றர்களை விசாரித்தீர்களோ? - சூரசேகன் :-இதோ விசாரிப்போம். - சுசீலன் :-சகலத்திற்கும் நான் கிருகத்திற்குப் போய் வெகு சீக்கிரத்தில் திரும்பி விடுகிறேன். அதற்குள் தாங்களும் ஒற்றர்களே பழைத்து விசாரியுங்கள். சூரசேகன் :-ஆம். அப்படியே செய்வோம்.

(யாவரும் போகின்றனர்.)

ஆருங்களம் இடம்:-சோழனரண்மனை காலம்:-பிற்பகல் பாத்திரங்கள்:-விசேந்திரன், சற்குணன் வீரேந்திரன் :-ஒ! சற்குணவழுதியாரே! கேட்டீர்களோ ஒரு சமாசாாம் ? சற்குணன் :-என்ன ? தெரியாதே! வீரேந்திரன் :-உங்களுடைய குமாரன் சுந்தராக்தனேச் சூரசேனன் கொன்று விட்டபிறகு அவனுடைய மகளை ஏதோ பூதமோ பேயோ அடித் துக்கொண்டு போய்விட்டதாம்.-- சற்குணன் :-இப்பொழுது சூரசேன் மகளைப் பூதங்கொண்டு போன லென்ன ? பேய்கொண்டு போகுலென்ன? நம்முடைய குமாரன் சுந்தராநந்தன் போன பிறகு நமக்கு இராஜ்யா கிகாரமும் வேண் டுமோ ? - - வீரேந்திரன் :-இல்லை, இல்லை. காங்கள் அப்படிச் சொல்லவே கூடாது. அந்தப்பயல் சூரசேன் செய்த அநியாயங்களுக்கெல்லாம் நம்மு டைய பஞ்சநதேசரே தண்டிக்கின்ருர் பாருங்கள் தெய்வத்திற் குக்கூட அவனுடைய கொடுமை பொறுக்கமுடியயில்லை! ஆகையி ேைலதான் குரசோன் தன்பெண்ணே யிழந்தான் ! சற்குணன் :-நாம் அவன்மீது படையெடுத்துச் செல்லப்போகின்ருே மென் பதை உணர்ந்தபிற்பாடுதான் அவன் எனது மகன் சுந்தராந்தனைக்

கொல்லுதற்கு யோசனை செய்தானும், இதுசமாசாரம் சேரநாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/91&oldid=657125" இலிருந்து மீள்விக்கப்பட்டது