பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கலைமான் ரோகந்தா வெகு காலத்திற்கு முன்பு, உத்தரப் பிரதேசக் காட்டின் அருகே யிருந்த ஒரு சமவெளியில், ஒரு மான்குட்டி பிறந்தது. அதன் பெயர் ரோகந்தா. - கறுப்பு மானை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? துள்ளி ஓடும் மான் இனத்திலேயே அதுதான் மிகவும் அழ கானது. இயற்கைச் சூழலில் இந்தியாவில் மட்டுமே இந்த இனம் அதிகமாக வாழ்கின்றது. நன்கு வளர்ந்த ஆண் மானின் முதுகு பட்டுப் போன்று கரிய நிறத்தில் இருக்கும். அடிப்புறம் வெண்மையாக இருக்கும். நெற்றியிலிருந்து சுருண்டு எழும்பும் கொம்புகள் அதற்கு அழகு சேர்க்கும். பெண்மான் சற்றே சிறியதாயிருக்கும். அதற்குக் கொம்புகள் இல்லாவிட்டாலும், ஒரு தனி அழகு உண்டு. அதன் நிறம் வெளிர் மஞ்சள். w ரோகந்தாவும் பிறக்கும்போது வெளிர்மஞ்சளாகத்தான் இருந்தது. ஆல்ை, அதற்கு மூன்று வயதானதும், அதன் மேனி அழகிய கருநிறமாக மாறத் தொடங்கியது. அப்போது அதன் பெற்ருேருக்கு ஒரே மகிழ்ச்சி. இனி அது தன்னைத் தானே கவனித்துக்கொள்ளமுடியும் என்பதையே அந்த மாற்றம் உணர்த்தியது. w