பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது உணரவில்லை. இப்போது உணர்கிறேன்’ என்ருர், குழந்தையிடம் தாய் அன்பு செலுத்துவதுபோல், ஒவ் வொருவரும் பிறரிடம் அன்பு செலுத்திவந்தால், உலகமே இன்பமயமாகி விடும். புத்தர் என்ற இந்த மகாஞானி எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டினர். அவர் மறைந்ததும், மக்கள் அவரது பெருங்கருணையை எண்ணி வியந்தனர். எல்லா மதங்களிலும் பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு. அது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நல்லது செய்வோர் சொர்க்கத்தை அடைந்து என்றென்றும் அங்கே சுகமாக வாழ் வார்கள் என்பதுதான் அது. ஆல்ை, புத்தரைப் பற்றிய வரலாறு வேறு விதமாக இருக்கிறது. அவர், சொர்க்கத்திற்குப் போவதை விரும்பவில்லையாம். உயிரினங்கள் - அதாவது மக்களும் மிருகங்களும் - எத்தனே எத்தனையோ பிறவிகள் எடுக்கிருர்கள். ஒவ்வொரு பிறவியிலும், அவர்கள் ன்பப் படும்போது அவர்களுக்கு உதவவேண்டும் என்று அவர் விரும்பினராம். அதல்ை அவரும் திரும்பத் திரும்ப் இந்தப் பூமியிலே பல பிறவிகள் எடுத்தர்ராம். இளவரசர் சித்தார்த்த ராகப் பிறப்பதற்கு முன்பே, அவர் பல பிறவிகள் எடுத்திருந் தாராம். வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் அவுர் மிருகமாகவோ அல்லது மனிதனகவோ பிறந்து, பிறருடைய துன்பங்களே எப்படித் துடைத்தார் என்று பல கதைகள் கூறுகின்றன. 魯蠶 கூறும் ஒவ்வொரு கதை யையும் ஒரு ஜாதகம் (பிற என்பார்கள். இந்தக் கதைகள் எல்லாவற்றையும் பாலி மொழியில் எழுதிவைத்தார்கள். இப்படி 500க்கு மேற்பட்ட கதைகள் பர்லிமொழியில் உள்ளன. எல்லாமே அழகிய கதைகள், முதலில் அவற்றைப் பாலியிலிருந்து சம்ஸ்கிருதத்தில் விரிவாக மொழிபெயர்த் தார்கள். பிறகு, பண்டைய இந்தியச் சிற்பிகள் இக்கதைகளை சாஞ்சி, அமராவதி போன்ற பெளத்தத் தலங்களில் கல்லிலே செதுக்கிவைத்தார்கள். அதன்பிறகு, ஒவியர்கள் அவற்றை வண்ண ஒவியங்களாகத் தீட்டினர்கள். இந்தக் கதைகளில் பல அஜந்தாக் குகைகளில் சித்திரிக்கப் பெற்றுள்ளன. இங்கே இரண்டு கதைகளைத் தருகிருேம். ரோகந்தா என்பது ஒரு கறுப்புக்கலைமான். நந்திரியா என்பது ஒரு ரங்கு. அவற்றின் அன்பையும் தியாகத்தையும் படிக்கும் பாது, அவை கருணை வடிவான புத்தரின் மறுபிறவிகளே என்பதையும், உல்கிலே ஆனந்தமும் அன்பும் பெருகவே அவர் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தார் என்பதையும் நன்கு உணருவீர்கள்.