பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தார்கள். அவர்களே அவர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். சிறு குழந்தையை விட்டுப் பிரிவது அவருக்கு வருத்தமாக இருந்தது. தம் கையில் குழந்தையை எடுத்துக் கொண்டால்தான், அந்த இடத்தை விட்டு நகரமுடியும் என்று அவருக்குத் தோன்றியது. ஆல்ை, தூங்கும்போது கூட, குழந்தையை அதனுடைய தாய் தன் கையால் அணேத் துக் கொண்டிருந்தாள். இளவரசியின் கையை நகர்த் தில்ை, அவள் விழித்துக்கொள்வாள். அபபுறம் நான வெளி யேற முடியாது. என் அலேச்சல் முடிந்து, மக்களின் துயரம் தீர வழி கண்ட பிறகே நான் திரும்பிவந்து என் மகனைப் பார்ப்பேன்’ என்று தீர்மானித்தார். இங்குமங்கும் அலேவதிலும் தியானத்திலும் பல ஆண்டு கள் கழிந்தன. ஒருநாள் அவருக்குத் தோன்றியது: "அடடே, அன்று இரவு நான் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே மக் கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கு என்ன வழி என்பதைக் கண்டேனே தூக்கத்திலும் தாய் தன் குழந்தையைக் கையால் அனைத்துப் பாதுகாத்தாளே, அந்தக் காட்சியைக் கண்டபோது அதன் பொருள் எனக்கு விளங்கவில்லே. தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பதுபோல், ஒவ்வொருவரும் தாயுள்ளத்துடன் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்திப் பாதுகாக்கவேண்டும் என்ற உண்மையை