பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நண்பனே, நமது துரதிருஷ்டத்தைப் பார். நம்மிலே தினமும் ஒருவர் சாகவேண்டியிருக்கிறது! பிறந்த உயிர்கள் எல்லாமே ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். நாம் காட்டிலே இருந்தபோதுகூட வேடர்களோ, ஆதிவாசி களோ, குடியானவர்களோ, காட்டு மிருகங்களோ நமக்குத் தொல்லே கொடுத்துக் கொண்டுதான் வந்தார்கள். அவர் களிடமிருந்து தப்ப முடிந்ததா? இங்கு தினமும் ஒரு மான் வீதம் நாம் பறி கொடுக்கிருேம். ஆலுைம், பலர் வீணுக அடி படுவதும், அவதிப்படுவதும் பரிதாபமாக இருக்கிறதே! 'உண்மைதான். இதற்கு நாம் என்ன செய்வது? தெரிய வில்லேயே,’ என்றது ஹீரான், இதற்கு ஒரு வழி இருக்கிறது. நாம் தினமும் திருவுளச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம். எந்த மானுக்குச் சீட்டு விழுகிறதோ, அதுதான் அன்று அரசனின் வேட்டைக்குப் போகவேண்டும். ஒரு நாள் எனது கூட்டத்திலிருந்து, அடுத்த நாள் உனது கூட்டத்திலிருந்து - இப்படி மாறி மாறி நாம் மான்களே அனுப்புவோம். இந்த ஏற்பாட்டால், மற்ற மான்கள் அடிபடாமல் தப்பும்.’’ என்று யோசனை கூறியது, ரோகந்தா. ஹீரான் உடனே இதற்கு இசைந்தது. வேட்டையாடுவதில் அளவில்லாத ஆசை இருந்தாலும் ஒரு நாளுக்கு ஒரு மான் கிடைத்தாலே போதும் என்று அரசன் நினைத்தான். தினந்தோறும் பல மான்கள் வீணுக அடி படுவது அவனுக்கும் வருத்தமாகவே இருந்தது. எனவே அவனும் இந்தத் திட்டத்திற்குச் சம்மதித்தான். ஆளுலும், ஒன்று மட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லே. தினமும் ஒரு மான்