பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாம். அந்த அற்புத மாம்பழங்களே நீ மட்டுமே தின்னப்பா’ என்று கூறிவிட்டன. அன்று முதல் நந்திரியாவும் அவை சொன்னபடியே செய்துவந்தது. தீவை அது முதல் முதலாக அடைந்தபோது மழைக்காலத் தொடக்கம். பருவமழை அதிகமாக ஆக, ஒடையில் நீர் மட்டம் உயர்வதைக் கவனித்தது. நீர்மட்டம் உயர உயர, பாறை தெரியும் அளவும் குறைந்துகொண்டே வந்தது. 'இந்தப் பாறையைக் கவனமாகப் பார்த்தபடி இருக்கவேண் டும். ஒரு நாள் பாறை முழுவதும் நீருக்குள் மூழ்கிவிடும். அப்புறம் தீவுக்குப் போக முடியாது. பல வாரகாலம், அதா வது, வெள்ளம் வடிந்து மறுபடியும் நீருக்கு மேல் பாறை தெரியும் வரை காத்திருக்க வேண்டும் என்பதை அது உணர்ந்தது. * . . . ; ... . . . . . . .” & "