பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடையில் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நந்திரியா_கரைக்கு வந்தபோது, சீறிக்கொண்டிருந்த வெள்ளத்திற்கு மேலே பாறையின் ஒரு சிறு பகுதிதான் தென்பட்டது. தாவலாமா வேண்டாமா என்று நந்திரியா சற்றே தயங்கியது. எத்தன முறை இங்கே தாவியிருக்கிருேம்? பயமென்ன? வெளியே இலேசாகத் தெரியும் பாறையின் மீது தாவிவிடலாம். பிறகு, அங்கிருந்து ஒரே பாய்ச்சல்தானே! என்று துணிந்தது. அன்றுதான் கடைசி நாள் என்பதையும், அப்புறம் மழை ஒய்ந்து, வெள் ளம் வடியும் வரை அங்கே வரமுடியாது என்பதையும் உணர்ந்தது. தீவுக்குத் தாவிச் சென்ற குரங்கு, இன்னும் பல நாட்கள் அல்லது பல வாரங்கள் அங்கு வரமுடியாதே என்ற நினைப்பில் அங்கேயே அதிக நேரம் தங்கிவிட்டது. நேரம் அதிகமாகி விட்டது என்பதை உணர்ந்ததும், அவசர அவசரமாகத் தீவிலிருந்து வழக்கமாகப் பாறைக்குத் தாவிச் செல்லும் இடத் திற்கு வ்ந்தது. அப்போது சூரியன் மரங்களுக்குப் பின்னல் மறைந்து விட்டது. வழக்கமாக அது திரும்பும்போது, ஓடை யிலே மிாலே ஒளி இருக்கும். ஆல்ை, அப்போது நிழல் படிந்து மங்கலாக இருந்தது.