பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலைக்கு ஒரே ஆத்திரம். தன் தந்திரம் வெளிப்பட்டு விட்டதே என்ற கோபத்துடன், ‘என்ன வேண்டுமா! உன்னேத் தின்ன வேண்டும்.’’ என்றது. வேறு வழி யில்லாததால், நந்திரியா முதலயைத் தந்திரத் தாலேயே வெல்லத் தீர்மானித்தது. அது சொன்னது: 'முதலேயே, எனக்குத் தப்ப வழியில்லே. ஆகையால், என்னேயே உன்னிடம் தருகிறேன். நான் இப்போது தாவப் போகிறேன். உன் வாயை அகலத் திறந்து என்னைப் பிடித் துக்கொள். கண் ஜாக்கிரதை, ஒரு வேளை, நான் குறி தவறி, உன் வாய்க்குள் விழாமல், உன் தலைமேல் விழுந்துவிட்டால், உன் கண்களுக்கு ஆபத்து ஆகையால், கண்களை இறுக மூடிக்கொள்.' முட்டாள் முதலே அப்படியே வாயை அகலத் திறந்து, கண்களே இறுக மூடிக்கொண்டது. நந்திரியா முதலில் நடுங் கியது. பிறகு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, முதலே