பக்கம்:ரோஜாச் செடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“என்னம்மா, நீங்கள் இப்படிச் சொல்லலாமா? நாங்கள் சும்மாவா கேட்கிறோம்? பணம் தருகிறோம் அம்மா!” என்றாள் மீரா.

“பணம் இருக்கட்டும். பார்வதியின் மனம் நோகுமே...!” என்றாள் அந்த அம்மாள்.

உடனே கமலா, “பணமென்றால் நாலணா எட்டணா இல்லை அம்மா. எவ்வளவு வேணுமோ கேளுங்கள். இரண்டு ரூபாய் வேனுமா? இல்லே, மூன்று ரூபாய். அதுவும் இல்லை. நாலு ரூபாய்...சரி. உங்களுக்குத் திருப்தியாக இருக்கட்டும். ஐந்து ரூபாய் தருகிறோம்” என்று கூறிவிட்டு, மீரா இந்த அம்மாள் மிகவும் நல்லவர்கள். அந்த ஐந்து ரூபாயை எடு. கொடுத்து விட்டு, உடனே ரோஜாச் செடியை வாங்கிக்கொண்டு போகலாம். நேரமாகிறது” என்றாள். மீரா தன்னிடமிருந்த ஐந்து ரூபாய் நோட்டைக் கமலாவிடம் கொடுத்தாள். கமலா அதை வாங்கி அந்த அம்மாளிடம் நீட்டினாள்.

இதை வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு சின்னப் பையனைக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கும். இன்னென்றையும் சொல்லிவிடவேண்டும். இந்தச் செடிக்குப் பரிசு கிடைக்குமென்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. கல்வி மந்திரி வருகிற போது காட்டாயம் இவளும் கலந்து கொள்ள வேணுமாம். இப்படி இவள் அப்பா ஆசைப்படுகிறார். இந்த ஐந்து ரூபாயிருந்தால் உங்களுக்கு எவ்வளவு உதவியாயிருக்கும் ! பார்வதிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்கலாம். சும்மா வாங்கிக்கொள்ளுங்கள் அம்மா” என்று கூறி அந்த அம்மாளின் கையிலே நோட்டைத் திணித்தாள், கமலா.

அந்த அம்மாள் கொஞ்ச நேரம் யோசித்தாள். பார்வதி வந்தால் நிச்சயம் வருத்தப்படுவாள்...ஆனாலும், அவளுக்குப் பரிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/10&oldid=482476" இலிருந்து மீள்விக்கப்பட்டது