இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிடைக்கிறது என்ன நிச்சயம்? ஒன்றுமே கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால், இந்த ஐந்து ரூபாயோ நிச்சயம் நமக்குக் கிடைக்கிறது. பார்வதியின் பாவாடை சட்டையெல்லாம் கிழிந்து போயிருக்கின்றன. இந்த ஐந்து ரூபாயிலே ஒரு பாவாடையும் சட்டையும் வாங்கிக் கொடுக்கலா மல்லவா? என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டாள்.