பக்கம்:ரோஜாச் செடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறகு “சரி, மிகவும் கட்டாயப் படுத்துகிறீர்கள். பார்வதிதான் வருத்தப்படுவாளே என்று பார்த்தேன். உம், நடக்கிறபடி நடக்கட்டும்” என்று கூறி ரோஜாச் செடியை அந்த ஐந்து ரூபாய்க்குக் கொடுக்க ஒப்புக்கொண்டு விட்டாள்.

மீராவும் கமலாவும் ஆனந்தமாக அந்த ரோஜாச் செடியுடன் வீடு நோக்கிக் கிளம்பினர்கள். போகும் போதே, மீரா, ஐந்து ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் கிடைக்கப் போகிறது! அப்போது என்னே மறந்து விடாதே!" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் கமலா.

பார்வதி மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். வேலிக் கதவைத் திறந்ததும், ரோஜாச் செடி இருந்த இடத்தைப் பார்த்தாள். உடனே, அவளுக்குத் ‘திக்’கென்றது. பார்வதி அந்த ரோஜாச் செடி மீது உயிரையே வைத்திருந்தாள். கண்ணும் கருத்துமாக இத்தனை நாளாக வளர்த்து வந்தாள். போட்டியில் எப்படியும் அதற்குப் பரிசு கிடைக்கும் என்று நம்பியிருந்தாள். போகும் போதும் வரும் போதும் அதைப் பார்க்காமல் போக மாட்டாள். பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம், “அம்மா, வேலிக் கதவைத் திறந்து போட்டுவிடாதே அம்மா. ஆடு மாடு வந்து ரோஜாச் செடியைத் தின்றுவிடும்!” என்று எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் போவாள். இப்படியிருக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/12&oldid=482527" இலிருந்து மீள்விக்கப்பட்டது