பக்கம்:ரோஜாச் செடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அந்த ரோஜாச் செடியைத் தொட்டி யோடு காணோம் என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் !

“அம்மா, அம்மா என் ரோஜாச் செடி எங்கே அம்மா ?” என்று பதறிக்கொண்டே கேட்டாள் பார்வதி.

“பார்வதி, ஒன்றும் ஆபத்து வந்துவிடவில்லை. பதறாதே! நான் சொல்லுவதைக் கேள்” என்று கூறிக் கொண்டே பார்வதியின் அருகிலே வந்தாள், அவளுடைய அம்மா. நடந்ததை அப்படியே எடுத்துச் சொன்னாள்

அதைக் கேட்டதும்! “என்ன அம்மா, இப்படிச் செய்து விட்டாயே! நான் எவ்வளவு பாடுபட்டு வளர்த்தேன் ! உனக்குத் தெரியாதா அம்மா ? பணம்தானா பெரிது! அப்படிப் பார்த்தால்கூட நாளைக்கு நமக்குப் பரிசு கிடைத்தாலும் கிடைக்குமே அம்மா!”

“பரிசு நிச்சயமாய்க் கிடைக்கும் என்று எப்படியம்மா சொல்லுவது ? பரிசு கிடைக்காதபோனால், இந்த ஐந்து ரூபாயும் போய்விடுமே ! இப்போது, இதில் உனக்கு அழகான ஒரு சட்டை, ஒரு பாவாடை....”

“போம்மா. நான் அருமையாக வளர்த்த செடியே போய் விட்டது. இதெல்லாம் எதற்கு அம்மா ?” என்று கூறிவிட்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் பார்வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/13&oldid=482528" இலிருந்து மீள்விக்கப்பட்டது