பக்கம்:ரோஜாச் செடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுநாள் அதிகாலை நேரம். சிறுவர் சிறுமியர் அவரவருடைய பூச்செடிகளைக் கொண்டுபோய்க் காட்சியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மீராவும் அவளுடைய ரோஜாச் செடியை ஒரு வேலையாளின் தலையில் ஏற்றிக்கொண்டு வந்தாள். ஆணால், எல்லோரையும் போல மண் தொட்டியில் அந்த ரோஜாச் செடியை அவள் வைத்திருக்கவில்லை. பணக்காரியல்லவா? அதனால் எவர்-சில்வர் தொட்டியில் வைத்திருந்தாள். முன்பு பார்வதி வைத்திருந்த பழைய மண் தொட்டியிலிருந்து இதற்கு மாற்றியிருந்தாள்.

மாலையில் கல்வி மந்திரி வந்தார். காட்சியைச் சுற்றிப் பார்த்தார். எல்லாச் செடிகளையும் விட மீராவின் ரோஜாச் செடிதான் நன்றாகவும் அழகாகவும் இருப்பதாக அவருடைய அபிப்பிராயம். மற்றவர்களின் அபிப்பிராயமும் அதுதான். அதனால் அந்தச் செடிக்கே பரிசு கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். உடனே மீராவுக்கே முதல் பரிசு என்றார்கள். மீரா மிகவும் குதுகலமாக மந்திரியின் அருகே ஒடி வந்தாள்.

அப்போது மந்திரிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விட்டது. “ஏனம்மா எவர்-சில்வர் தொட்டியில் செடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/14&oldid=482529" இலிருந்து மீள்விக்கப்பட்டது