பக்கம்:ரோஜாச் செடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்த்திருக்கிறாயே தொட்டியை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்தால், யாராவது தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்களா?” என்று கேட்டார்.

தோட்டத்திலே நான் இதை வைக்கவே மாட்டேன். என் அறைக்குள்ளேயே பத்திரமாக வைத்திருப்பேன்” என்றாள் மீரா.

மந்திரி புன்சிரிப்புடன், “சரி. ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதற்குத் தண்ணிர் ஊற்றுவாய் ?” என்று கேட்டார்.

மீராவுக்கு செடி வளர்ப்பதைப் பற்றி என்ன தெரியும்? “பத்துப் பதினைந்து தடவைக்குக் குறையாமல் ஊற்றுவேன். இல்லாதபோனால் இப்படி ஜோராக வளர்ந்திருக்குமா?” என்றாள்.

“ஒஹோ, அப்படியா! சரி. இந்த எவர் - சில்வர் தொட்டியிலே ஓட்டை ஏதாவது இருக்குமோ?” என்று கேட்டார் மந்திரி.

“ஓட்டையா! ஓட்டைச் சாமான்களை நாங்கள் உபயோகப்படுத்தவே மாட்டோம். ஒரு சின்ன ஓட்டைகூட இருக்காது. நல்ல தொட்டி!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/15&oldid=482530" இலிருந்து மீள்விக்கப்பட்டது