இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மீரா சொன்னதைக் கேட்டதும் சிரித்துக் கொண்டே “அப்படியானால் இந்தப் பரிசு உனக்கு இல்லை” என்று சொன்னார் மந்திரி.
மீராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
காரணம் என்ன தெரியுமா ? நீ சொன்ன மாதிரி அறைக்குள்ளேயே இந்தச் செடி இருந்திருந்தால், சூரிய வெளிச்சம் இல்லாமல் கெட்டுப் போயிருக்கும். அத்துடன் நீ தினமும் பத்துப் பதினைந்து தடவை தண்ணிர் ஊற்றினதாகச் சொன்னாயே, அப்படி ஊற்றியிருந்தால் அழுகிப் போயிருக்கும்