பக்கம்:ரோஜாச் செடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கண்ணு, நமக்குக் கடவுள் கொம்பைக் கொடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. அழகுக்குத்தான் கொடுத்திருக்கிறார் ” என்றது அம்மா மான்.

இப்படி அம்மா மானும், குட்டி மானும் பேசிக்கொண் டிருக்கும்போதே, தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பது போலிருந்தது. உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது. மறுநிமிஷம், “ஐயையோ, வேட்டைநாய் வருவதுபோல் தெரிகிறதே! வா. வா. சீக்கிரம் ஒடிவா” என்று கூறிவிட்டு முன்னால் ஓட ஆரம்த்தது அம்மா மான்.

ஆனால் குட்டி மான் ஒடவில்லை. இந்த வேட்டை நாய் எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும்’ என்று நினைத்தது. உடனே அங்கே இருந்த ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

சிறிது நேரத்தில், ‘தடதட’ என்று வேட்டை நாய் அந்தப் பக்கமாக ஒடி வந்தது. ஆனால், நல்லகாலம்; அது ஒளிந் திருந்த மான்குட்டியைப் பார்க்கவில்லை ! ஏதோ ஒரு திசையைப் பார்த்து ஓடிவிட்டது.

வேட்டை நாய் போனபிறகு, குட் டிமான் வெளியே வந்தது. அம்மா போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்றது. வெகு நேரம் சென்று அம்மா மான் அங்கு வந்து சேர்ந்தது. வந்தவுடனே அது குட்டி மானைப் பார்த்து, “அப்பா! நல்லகாலம். அந்தச் சண்டாள நாயிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/22&oldid=482537" இலிருந்து மீள்விக்கப்பட்டது