பக்கம்:ரோஜாச் செடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டாய்! இளங்கன்று பயமறியாது என்பார்கள். அது உன் விஷயத்தில் உண்மைதான். என்ன இருந்தாலும் நான் ஒட ஆரம்பித்தவுடனே நீயும் ஓடி வந்திருக்க வேண்டும். நீயும் கூட வருவாய் என்று நினைத்துத்தான் நான் முன்னால் ஒடினேன். போகட்டும். இனி, இந்த மாதிரி செய் யாதே. ஆபத்து!” என்று புத்தி சொன்னது.

“அம்மா, நீ மிகவும் பயப்படுகிறாய் அம்மா ! நான் இந்தப் புதருக்குள் ஒளிந்துகொண்டு, வேட்டை நாய் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். அது உன் உயரம்கூட இல்லை. அதற்குக் கொம்பு இருக்கிறதா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. அதனால் நம்மை என்ன செய்ய முடியும் ? எனக்கு மட்டும் கொம்பு முளைக்கட்டும்; ஒரே குத்திலே அதைக் குத்திக் கீழே சாய்த்து விடுகிறேன்” என்று வீரமாகச் சொன்னது குட்டி மான்,

இதைக் கேட்டதும், அம்மா மான் சிரித்துக்கொண்டே , “குழந்தாய், நீ பெரிய தைரியசாலிதான். இருந்தாலும், வேட்டை நாய், சிங்கம் புலி இந்த மாதிரி மிருகங்களுக்கெல்லாம் நாம் பயப்படாமல் இருக்க முடியாது. கடவுள் நமக்கு அந்த மாதிரி படைத்திருக்கிறார் ” என்றது.

உடனே குட்டி மான், “ஏனம்மா, இந்தக் காட்டிலே சிங்கம் கூட இருக்கிறதா?” என்று கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/23&oldid=482538" இலிருந்து மீள்விக்கப்பட்டது