பக்கம்:ரோஜாச் செடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இருக்கிறது. ஆனால் எப்போதாவது அபூர்வமாகத்தான் இந்தப் பக்கம் வரும்” என்றது அம்மா மான்.

“அப்படியா! அதையும் ஒரு நாளைக்கு நான் நேரிலே பார்த்து விடுகிறேன்” என்றது குட்டி மான்.

“ஐயையோ, சிங்கத்தை நேரிலே பார்ப்பதா! அது நம்மைக் கொன்று போட்டு விடுமே!” என்று உடம்பை உதறிக் கொண்டே சொன்னது அம்மா மான்.

“போம்மா, எதைச் சொன்னாலும், அது கடித்துவிடும். இது கொன்றுவிடும் என்றுதான் சொல்கிறாய்” என்று சலிப்போடு கூறியது குட்டி மான

“நீயோ சிறுபிள்ளை, உனக்கு எங்கே பயம் தெரியப் போகிறது?..சரி. வா. தண்ணிர் குடித்துவிட்டு வரலாம்” என்றது அம்மா மான்.

பிறகு அம்மா மானும் குட்டி மானும் தண்ணீர் குடிக்கச் சென்றன.

இது நடந்து ஒரு வாரம் இருக்கும

அன்று ஒரு நாள் குட்டி மானும் அம்மா மானும் ஒரு குட்டைக்குத் தண்ணிர் குடிக்கச் சென்றன. தண்ணிர் குடித்து விட்டுத் திரும்பி வரும்போது, அம்மா மான் குனிந்து தரையைப் பார்த்தது. பார்த்ததும் “ஐயையோ சிங்கமல்லவா இங்கே வந்திருக்கிறது !” என்று பயத்தோடு சொன்னது.

“என்னம்மா சிங்கமா! அது எப்படி இருக்கும்? சொல்லம்மா” என்று கேட்டது குட்டி மான்.

“இதோ பார், சிங்கத்தின் காலடி தெரிகிறது. இந்தப் பக்கமாகத்தான் அது போயிருக்கிறது. ஆகையால், நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜாச்_செடி.pdf/24&oldid=482539" இலிருந்து மீள்விக்கப்பட்டது