இப்படிப் போவதே ஆபத்து வந்த பக்க மாகவே ஓடி விடலாம். சிங்கம் நம்மைப் பார்த்தால், சும்மா விடாது. அப்படியே மேலே பாய்ந்து கடித்துத் தின்றுவிடும் ” என்று திகிலுடன் கூறியது. அம்மா மான்.
உடனே குட்டி மான், “நீ வேண்டுமானல், போம்மா. நான் இங்கேயிருந்து சிங்கத்தைப் பார்த்து விட்டுத்தான் வரப்போகிறேன் ” என்றது.
இதைக் கேட்டதும் அம்மா மானுக்குக் கோபம் வந்து விட்டது. என்ன இது, புரியாமல் பேசுகிறாயே! சாவதானமாகப் பேச இது நேரமில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகவேண்டும். வா, நாம் இருவரும் ஒடிப் போய்விடலாம்” என்று கட்டாயப் படுத்தியத
அதே சமயம் ‘தடதட’ என்று தூரத்திலே ஒரு சத்தம் கேட்டது. உடனே அம்மா மான் "ஐயோ வேட்டை நாய் வேறு வருகிறதே! இனியும் இங்கு நிற்கலாமா! வா, வா, சிக்கிரம் வா. நிற்காதே! உம், ஒடி வா’ என்று கூறிக்கொண்டே ஒட ஆரம்பித்தது.
அம்மாவின் பின்னால் குட்டி மான் ஓடவில்லை. முன்போலவே அங்கிருந்த ஒரு பெரிய புதருக்குள் மறைந்து கொண்டது வேட்டை நாய் எந்தப் பக்கம் வருகிறது என்று இடுக்கு வழியாகப் பார்த்தது.