உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

287


ரோமாபுரிப் பாண்டியன் 287 அரசன், வளவனின் மனப்போராட்டத்தைத் தெரிந்து கொள்ள எவ்வ ளவோ முயன்றான்; முடியவில்லை. 'அரசருக்கு யாராலும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையாய் இருக்கலாம்" என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதனையொட்டி அரசன், வளவனைத் தழுவியவாறு "உன்னைப் போன்ற உத்தமர்களின் நல்ல இதயமெல்லாம் என் பக்கம் இருக்கும்போது எனக்கு எப்படி இன்னல் வரும்? வராது!" என்று திடமாகச் சொன்னான். அந்தச் சமயத்தில் அங்கு வந்த காவலன், இருங்கோவேளின் தங்கை தாமரை, கோட்டை வாயிலில் காத்திருக்கும் செய்தியைக் கூறினான். வளவனின் முகமும் மாறியது. "என்ன! இருங்கோவேளின் தங்கையா? அய்யோ! இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கப் போகிறது- வேண்டாம்! அவளை அனுமதிக்காதீர்கள்" என்று கத்தினான் வளவன். "ஆமாம்; அவளை நான் அனுமதிக்கப் போவதில்லை" எனக் கூறியவாறு கரிகால் மன்னன் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வாயிலோனும் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். மன்னன், தன் மாளிகைக்குள் நுழைந்தான். வாயிலோன் வெளியில் நின்றான். உள்ளே சென்ற மன்னன், திரும்பி வந்து காவலனைப் பார்த்து, “நான் வளவன் மனத்தைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக வேளிர் குல இளவரசியை அனுமதிக்க மாட்டேன் என்று கூறினேன். நீ, உடனே இளவரசியை பெருந்தேவியின் சவம் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்!' என உத்தரவிட்டான். வாயிலோனும் மன்னனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுக் கோட்டை வாயிற்புறம் ஓடி வந்தான். அங்கு அவன் வருகைக்காகக் காத்திருந்த இளவரசியும், செழியனும் அனுமதி கிடைத்த செய்தியறிந்து ஆறுதல் பெற்றனர். கோட்டை வாயிலின் பெருங்கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளே இருபுறமும் படைவீரர்கள் அணிவகுத்து நின்றனர். அந்த அணிவகுப்புக்கு இடையே தாமரையும், அவளுக்குப் பின்னே செழியனும் அழைத்துச் செல்லப்பட்டனர். வேளிர்குல இளவரசி புகார் அரண்மனைக்குள் வந்து விட்டாள் என்ற செய்தி தலைநகரமெங்கும் பரவிவிட்டது. அவளுடன் ஒரு பாதுகாப்பு வீரனும் வந்திருக்கிறான் என்ற செய்தியறிந்த மக்கள், அவனால் என்ன ஆபத்து ஏற்படப் போகிறதோ என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். சோழப் பெருங்குடி மக்களின் எண்ணத்தை மதிக்காமல்