பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

25

மேற்கண்ட நோக்கங்கள் அனைத்தையும் டால்ஸ்டாய் மாணவப் பருவத்தில் கடைப்பிடித்தார்; அவற்றைத் தனது டைரியில் எழுதினார் உலகுக்கு ஒரு பாடமாக்கி அதற்கு நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் என்று பெயர் சூட்டினார்.

இந்தக் குறிக்கோள்களால் தூண்டப்பட்ட டால்ஸ்டாய், கிழக்கு நாடுகளது மொழிகளை எல்லாம் கற்றார். அரபு, துருக்கி மொழிகளைப் படிக்க விரும்பினார்.

பிறகு, சட்டம் படித்தார்; ஆனால் அவருக்கு சட்டம் கற்பித்த ஜெர்மன் பேராசிரியருக்கு ருஷிய மொழி நன்றாகத் தெரியாது; மாணவர்களுக்குப் புரிய வைக்கக் கூடிய அளவுக்கு அவருக்கு ரஷ்ய மொழி தெரியவில்லை. அதனால், சட்டக் கல்வியைப் பாதியளவோடு நிறுத்திக் கொண்டார்.

இவற்றுக்கெல்லாம் பிறகு வரலாறும் அறநூல்களும் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், வரலாறு படிப்பதால் என்ன பயன்? என்ற சிந்தனை அவர் மனதை உறுத்தியது. அதனால், அதையும் படிக்காமல் கைவிட்டார்.

அறநூலாவது படிக்கலாமா என்று அவர் நீண்ட நெடு நாட்களாகச் சிந்தித்துப் பார்த்தார் என்ன காரணமோ அந்த ஆர்வமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அறநூல் படிக்க முடியாமல் ஊக்கம் குன்றியதற்கு என்ன காரணம்?

சிறுவயதில் தன் பெற்றோர்களுடன் நாள்தோறும் கிறித்துவத் தேவாலயம் சென்று வழிபட்ட டால்ஸ்டாய், ஆலயக் குருமார்கள் செய்யும் ஜபத்தினை ஊக்கமுடன் கேட்டு அதற்கேற்ப பக்திவேத பாராயணம் செய்து வந்தார். அவரது சிறு வயது மத நம்பிக்கை; வயது வளர வளரக் குன்றியதால், இப்போது நாத்திகராய் நடமாட ஆரம்பித்த அவருக்கு இப்போதைய தெளிவான வாழ்க்கையின் சிந்தனையில் எக்-