பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

லியோ டால்ஸ்டாயின்

ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவரது சொல்லோவியங்கள் வெளிவந்து கொண்டே இருந்ததால், டால்ஸ்டாய் புத்தகங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் இடையே நல்ல மதிப்பும், வரவேற்பும் விற்பனையும் வளர்த்து வந்தது.

நாளுக்கு நாள் லியோ டால்ஸ்டாயின் வாசகர்கள் நாடு நகரங்கள் எங்கும் பெருக ஆரம்பத்தார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் டால்ஸ்டாயினுடைய நூல்களை விரும்பி வாங்கி, மக்கள் இடையே விற்பனை செய்ய முகவர்கள் இருந்தார்கள். இவ்வாறு, நாடுகள் தோறும், நகரங்கள் தோறும் டால்ஸ்டாய் நூல்கள் விற்பனை பெருகி வந்ததால், நான்கே ஆண்டுகளில் அவரது நூல்களது விற்பனை பன்னிரண்டு லட்சங்களாகப் பெருகியது.

புகழேணியின் படிக்கட்டுகளிலே பொறுமையாகவும், பெருமையாகவும் ஏறிக்கொண்டு வந்த டால்ஸ்டாய் என்ற அறிவுலக வித்தகர், நகரத்திலே வாழ்ந்தாலும் சரி, கிராமத்திலே வாழ்ந்தாலும் சரி மனைவி மக்களோடு தனது வாழ்க்கையை மிகவும் எளிமையோடு நடத்தி வந்தார்.

எந்த ஊரிலே அந்த ஞானி வாழ்ந்தாலும், அவர் மக்களோடு மக்களாகவே ஒன்றி வாழ்ந்து வந்தார். எடுத்துக் காட்டாக அவர் மாஸ்கோ மாநகரிலே இருந்தபோது, ஏழைகளோடு ஏழையாக சேர்ந்து விறகு வெட்டுவார், தண்ணீர் சுமந்து வருவார், செருப்புத் தைப்பார்; தனது கைகளால் தயாரித்த செருப்புக்களையே அவர் அணிந்திருப்பார். கிராம மக்களைப் போலவே டால்ஸ்டாய் தனது முதுகிலே மூட்டைகளைச் சுமந்து கால்நடையாகவே செல்லுவார்.

கிராமங்களில் டால்ஸ்டாய் மரங்களை வெட்டி, அந்த விறகுகளை அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் இலவசமாகக் கொடுத்துவிடுவார். ஏழைகளுக்கு அவர் எப்போதெல்