பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்த்தது 盖器擎 எண்ணப் புகை நீண்டு நெளிந்து வளர வளர அவர் நடை வேகம் அதிகரித்தது. வழியிலே எதிர்ப்பட்டு கும்பிடு போட்டவர்களுக்குக் கும்பிடும், சிரிப்பு காட்டியவர்களுக்குப் புன்னகையும் பரிவர்த்தனே செய்தபடி அவர் நடந்து, தெருக் கள் சில கடந்து, பண்ண்ேயார் வீட்டை அடைந்தார். அவர் தாவன்ஞ வீட்டிவிருந்து கிளம்பும்போதே இரவு கண்ணுலகிலே குடியிருக்க இறங்கி வந்துகொண்டிருந்தது. அதற்கு வரவேற்பு அளிப்பது போல வீடுகள் தோறும் விளக்குகள் மலர்த்தன. சிவன் கோயிலில் சாயங்கால பூஜை மணி கன கணத்தது. மேலே வானிலே இறைந்து கிடந்த வர்ணக் கலவைகள் புகைப் ாகத் திகழ, பெரிய குளத் திலே பகலெல்லாம் நீராடி-நீந்தியும் மூழ்கியும் எழுந்தும்வாழ்கிற கருதிற நீர்க் கோழிகள் கூட்டம் கூட்டமாக தம் இருப்பிடம் தேடி விரைந்தன, 3. மனிதர்கள் இவற்றை யெல்லாம் கவனிக்கவில்லை. மனித சில் ஒரு மனிதஞன செல்லம் பண்டிதருக்கும் இவற்றைக் கவனிக்க நேரமில்லை: கவனிக்கும் பண்பும் இல்லை. ஆளுல் அவர் இந்த நேரத்திலே அந்தி வானின் வண்ணக் குழம் புடன் போட்டியிடுகிற மனிதகுண விசித்திரங்களை, மனித உள்ளத்து வர்னபேதங்களே, மனிதரது எண்ணம் சொல் செயல் ஜாலங்களேப் பற்றி எண்ணியபடி நடந்தார். அவர்க ளிடையே அவர்களுக்குத் தகுத்தபடி வேஷம் போட்டு வாழ் கிற தமது சாமர்த்தியத்தை வியந்துகொண்டு நடந்தார். மாலை மயங்கி இருள் வானே, வெளியை, மண்ணே எல்லாம் கவ்வுகிற சூழலிலே பொருள்கள் எல்லாம், மரங்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எல்லாம்-வெறும் உருவெளித் தோற்றங்களாகி, நிழல்களாகி, இருள் மொந்தைகளாகி, இருளோடு இருளாகிவிடுகிற வேடிக்கையை அவர் கவனிக்க வில்லை. மாணி. சமுத்திரத்திலே வாழ்க்கையை உருவகப் படுத்த முயல்கிற மக்கள் தனித்தனிச் செயல்கள், பண்புகள் வளர்க்க முயலும் வேளையிலேயே எல்லாம் தெளிவந்து, தனி §