பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 151 பத்ம நான் வடக்குப் பக்கத்திலேயே இருந்தேனே! ஒரு வரையும் காணவில்லையே! வீர மிகுதி இருப்பது மேற்குத்தானே சரிதான் அப்படித் தான் போனாள். இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது! இந்தச் சோலையில் சூரியனிருக்குமிடம் தெரியாமையால் கிழக்கு மேற்கு தெரிகிறதில்லை. தோழ என்ன இது? நீங்கள் சொல்வது எனக் கொன்றும் விளங்கவில்லையே! நன்றாய்த் தெரிவியுங்கள். வீர உன் தலை, என் கால், சாட்சியாகச் சொல்லுகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். உனக்குப் பயமென்பதே தேவை இல்லை. நான் அவளை அனுப்பி விட்டேன். தோழ எங்கே அனுப்பினர்கள்? வீர. அவள் இந்த உலகத்தையே விட்டுப் போய் விட்டாள். தோழ இதென்ன ஆச்சரியம்! வீர. ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சருகின் கீழ் சயனித்துக் கொண்டிருக்கிறாள் பார். (பிரித்துக் காட்டுகிறான்) தோழ ஆகா! என்ன அக்கிரமம் (மூர்ச்சித்து விழுகிறான்) வீர. இதென்ன இவனும் இறந்து விட்டானா என்ன? அவ ளிடத்தில் இவனுக்கென்ன இவ்வளவு பிரியம்? இவர்கள் இரு வருக்கும் ஒரு வேளை ஸ்நேகம் இருக்குமோ? ஆம், ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும். பத்ம (தோமுனைப் பார்த்து/ ஐயா எழுந்திரும் இத்த னைக்கும் நானே காரணம்! இவளை நான் அல்லவோ இங்கு அழைத்து வந்தேன். இந்தப் பழி எனக்கு அல்லவோ வந்து சேரும். தோழ (மிகவும் விசனத்து) ஐயோ வஸந்தஸேனா அன் பாகிய ஆறு வறண்டு போய் விட்டதோ? அழகானது, இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/153&oldid=887420" இலிருந்து மீள்விக்கப்பட்டது