வஞ்சகத்தை வென்ற வஞ்சி
219
கொண்டார்கள். (மல்லிகாவைப் பார்த்து திடுக்கிட்டு) ஆகா! இது யார்? இறந்தவள் எப்படிப் பிழைத்தாள் ! பீமா! என்ன ஆச்சரியம் இது!
மோக : ஸகாராம்! இந்தப் பெண் யார் என்பது உனக்குத் தெரியுமா? ஏன் இப்படி ஆச்சரியப்படுகிறாய்?
ஸகா : தெரியும். இவள் பவானியம்மாள்புரம் ஜெமீந்தாரின் பேர்த்தி மல்லிகா அல்லவா? இவள் ஆற்றில் விழுந்து இறந்தாளே! சே! இவள் இறந்திருக்க மாட்டாள் - என்று பிதற்றினான்.
அவற்றை இன்னதென்று அறிந்து கொள்ள மாட்டாமல் மல்லிகா திகைத்து திக்பிரமை கொண்டாள்.
பீம : (பாசாங்கு செய்து) என்ன விநோதம்! பரசுராம பாவாவின் போர்த்தியா இவள்? பெயர் மல்லிகாவா? நான் ஒருநாளும் அதைக் கேட்டதே இல்லையே! என்ன புளுகு இது!
தம : (ஏளனமாக) ஸகாராம்! பீமராவுக்கு ஒன்றும் தெரியாது! மல்லிகா ஜெமீந்தாரின் பேர்த்தி என்பதே தெரியாது. நீங்கள் இரண்டு பேரும் சில மாசகாலமாக தேடிக் கொண்டிருக்கும் மரண சாஸனமும் இன்னதென்பது தெரியாது.
பீம : அந்தச் சங்கதியை உனக்கு யார் சொன்னது? ஸகாராம் ராவா? இவன் சொல்வதெல்லாம் புளுகு; மற்றவர்கள் இவனிடத்தில் கடன் வாங்குவதைப் போல நானும் இவனிடத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டிருக்கிறேனே அன்றி இவனுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
ஸகா : பீமா! என்ன ஆச்சரியம்! நான் சொல்வதா புளுகு? அடே துரோகி! குப்பைத் தொட்டியிலிருந்து நான் எடுத்து வளர்த்ததைக் கூட மறந்து விட்டாயே!
மோக : போதும். உங்கள் பிரபாவம் நிறுத்துங்கள்; அடே பீமா! இவள் பவானியம்மாள்புரம் ஜெமீந்தாரின் பேர்த்தி என்பது உனக்குத் தெரியாது என்கிறாயே; அதிருக்கட்டும். நான் அவருடைய ஸாசனத்தைக் கண்டெடுத்தேனே; அதாவது ஞாபகம் இருக்கிறதா?
ஸகா : (ஆச்சரியத்தோடு ) ஸாசனம் அகப்பட்டதா! அடே பீமராவ்! என்னடா இது?