பக்கம்:வசந்த மல்லிகா.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

வஸந்தமல்லிகா

மல்லி : நான்தான் அவைகளுக்குச் சொந்தக்காரி என்பது அவருக்குத் தெரியுமா?

தம : தெரியாது. ஆனால் ஸஞ்சலாக்ஷி என்ற பெண்ணே சொந்தக்காரி என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

மல்லி : (புன்சிரிப்போடு) உங்களுடைய உள் கருத்து இன்னதென்பது தெரியவில்லை . சரி; நடக்கிறபடி நடக்கட்டும். உங்கள் இச்சைப்படி செய்யுங்கள்.

தம : நாளைய காலை ஆறுமணி; ஞாபகமிருக்கட்டும்.

மல்லி : அப்படியே நானும் கிருஷ்ணவேணியும் ஐந்தரை மணிக்கே தயாராக இருக்கிறோம்.

தம : ஆம்; கிருஷ்ணவேணியும் அவசியம் வர வேண்டும். என்னால் கூடுமானால் நானும் வருகிறேன்.

மல்லி : நன்றாயிருக்கிறதே! பருப்பில்லாமல் கலியாணமா? எங்களை நடத்துபவரில்லாமல் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் - என்றாள்.

மறுநாட் காலை ஏழரை மணி சமயமிருக்கலாம். பவானியம்மாள்புரத்து ஜெமீந்தாரது பங்களாவின் வாசலில் உன்னதமாக ஒரு பெட்டி வண்டி வந்துநின்றது. தமயந்தி, மல்லிகா, கிருஷ்ணவேணி ஆகிய மூன்று யௌவன மடந்தையரும் வண்டியிலிருந்து கீழே இறங்கி பங்களாவிற்குள் நுழைந்தனர். ஸகாராம்ராவ் அவர்களை எதிர் கொண்டழைத்தான். அந்தப் பங்களாவையும், பூஞ்சோலையையும், சமுத்திரத்தையும் கண்ட உடனே மல்லிகாவின் மனதில் கோடானு கோடி எண்ணங்கள் உதித்தன. முன்பு நடந்த விஷயங்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அவளது நினைவிற்கு வந்தன. துக்கோஜிராவ் முதலியோர் தன்னைச் செய்கையாலும் சொல்லாலும் வருத்தியதையும், தான் எத்தனையோ இரவுகளில் சமுத்திரக் கரையில் அமர்ந்து துயருற்று அலமர்ந்ததையும், பிறகு வஸந்தராவின் நட்புண்டான பின் தான் அடைந்த அற்ப சந்தோஷங்களையும் பற்றி நினைத்தாள். தான் வஸந்தராவோடு இரகஸியமாகத் தஞ்சைக்குப் புறப்பட்டுப் போனது பற்றி துக்கோஜி முதலியோர் என்ன நினைப்பார்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/260&oldid=1234106" இலிருந்து மீள்விக்கப்பட்டது