உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேய்களும் பெண்மானும்

9

துக்கோஜி : (விசனமாக) அம்மா கமலா! ஸீதா! கோபித்துக் கொள்ள வேண்டாம். என்னுடைய தரித்திரக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் நான் இவ்விதம் சொன்னேனேயொழிய உங்களுக்குச் செய்யக் கூடாதென்னும் லோபித்தனத்தினால் அல்ல. எனக்கு உங்களைத் தவிர வேறு யாரிருக்கிறார்கள்? உங்களுக்கில்லாமல் யாருக்குச் சேர்க்கப் போகிறேன்? போனது போகட்டும். இதோ 5-ரூபாய் இருக்கிறது. இதை நம்முடைய நிலக் குத்தவைக்காரன் இன்று தற்செயலாய்க் கொடுத்தான். இதை வைத்துக் கொண்டு மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் - என்று கமலாவிடத்தில் பணத்தைக் கொடுக்க, பெண்களின் கோபம் தணிந்தது, அவர்களது முகத்தில் புன் சிரிப்பும் அன்பும் தோன்றின.

கமலா : அப்பா பணமில்லை, பணமில்லையென்று ஏன் வீனில் கவலைப்பட வேண்டும்? நமக்கு வேண்டிய பணம் சமயத்தில் எங்கிருந்தாவது வந்துசேரும். உமக்கு லட்டுவின் மேல் நிரம்பவும் ஆசையல்லவா? பண்டிகைக்கு அதைத்தான் செய்யப் போகிறேன்.

ஸீதா : நம்முடைய ஜெமீந்தாரின் பங்களாக் காவற்காரனிடத்தில் அதன் திறவுகோலை வாங்கிக் கொண்டால், பண்டிகையன்று சாயுங்காலம் சமுத்திரத்துக்கும் பங்களாவுக்கும் மத்தியிலுள்ள சோலையில் நாம் உட்கார்ந்துகொண்டு பலகாரங்களை வேடிக்கையாகத் தின்றுவிட்டு வரலாம்.

துக்கோ : ஒகோ! உங்களுக்குச் சமாசாரம் தெரியாதோ?

கமலா : என்ன விசேஷம்? அப்பா!

துக்கோ : இறந்துபோன நம்முடைய ஜெமீந்தார் இந்த சமஸ்தானத்தை யாருக்கு எழுதி வைத்திருக்கிறாரோ என்பதைப் பற்றி நாம் இதுவரையில் சந்தேகித்துக் கொண்டிருந்தோம் அல்லவா?

ஸீதா : ஆம்; யாருக்குக் கொடுத்துவிட்டார்?

துக்கோ : அவருக்குக் குழந்தைகள் இல்லாதபடியால் பூனா தேசத்திலிருக்கும் அவருடைய பங்காளியான வஸந்தராவுக்கு எல்லாம் சேர்ந்துவிட்டதாம். அவர் நேற்று தஞ்சைக்கு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/27&oldid=1229155" இலிருந்து மீள்விக்கப்பட்டது