42
வஸந்தமல்லிகா
தனது முதுகைக் கொலுமண்டபத்தின் பக்கத்தில் காட்டிய வண்ணம் உட்கார்ந்திருந்த மல்லிகாவைக் கண்டு, சந்தடி செய்யாமல் மெல்லநடந்து அவளிடம் நெருங்கிவந்து பின்புறத்தில் நின்றார். அவளை அவ்வளவு சமீபத்தில் வெளிச்சத்தில் அப்போதே அவர் நன்றாகப் பார்த்தார். ஆதலால், அவளது கட்டழகும் ஜோதி கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தன. அவர் அப்புடியே திகைத்து ஸ்தம்பமாய் நின்று, "ஆகா! இவள் ராஜாத்தியைப் போலல்லவா இருக்கிறாள்! குப்பையில் தாமரை பூத்ததைப் போல இவ்வளவு சிரேஷ்டமான அழகைக் கொண்ட இந்தப் பொற்கொடி, துஷ்டர்களான இந்தப் பேதையர்களிடத்திலா அகப்பட்டு வருந்தவேண்டும்? ஆகா தன்னுடைய கால்களைக் கையினால் பிடித்துக் கொள்ளுகிறாளே ஐயோ பாவம்: காலையிலிருந்து பாடுபட்டு எனக்காக விருந்து தயாரித்த அலுப்பல்லவா! புஷ்பத்தைப்போன்ற இவளுடைய மிருதுவான அங்கங்கள் எவ்விதம் நோகின்றனவோ தெரியவில்லையே! இவள் நடக்க மட்டாமல் தத்தளித்ததை முன்னமேயே நான் கவனித்தேன்; அது இப்போது நிஜமாயிற்று. நான் இப்போது இவளைக்கூப்பிட்டாலும் இவளுக்கெதிரில் சென்றாலும் இவள் உடனே எழுந்து நிற்பாள். இப்போது இவள் அடையும் இன்பத்தைக் கெடுத்த பாவியாக நான் ஆய்விடுவேன். ஆனால் நான் இப்படியே பின்புறத்தில் மறைந்து நிற்பதும் பெருத்த தவறாகும். இவள் நான் இருப்பதை அறிந்தால், என்னைப்பற்றி நிரம்பவும் கேவலமான அபிப்பிராயம் கொண்டு, என்னை துன்மார்க்கனாக மதிப்பாள். இந்த தரும சங்கடத்திற்கு என்ன செய்கிறது? சரி; இங்கு நிற்காமல் கொலு மண்டபத்திற்குப் போவதே நல்லது" என்று தீர்மானித்துக்கொண்டு வந்த வழியே திரும்பிக் கொலுமண்டபத்தை நோக்கி நடந்தார்.
அந்தச் சமயத்தில் தற்செயலாகப் பின்புறம் திரும்பிப் பார்த்த மல்லிகா, ஜெமீந்தார் போனதைக் கண்டு திடுக்கிட்டெழுந்து மற்றவரும் அந்த வழியாகத்தான் போயிருக்க வேண்டுமென்று நினைத்து அவருக்குப் பின்புறம் நடக்க ஆரம்பித்தாள். அதை யறிந்த ஜெமீந்தார் "மல்லிகா ஏன் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சநேரம் இளைப்பாறுகிறதுதானே! நான் உன்னைக் காணாமல் திரும்பி வந்து தேடிப்பார்த்தேன். நீ சிரமபரிகாரம்