உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸுகைாரம்பம்

63

யம்! நல்லது; நான் சொல்வதுபோல் நீ செய்வாயா? கொழும்புக்குப் போகாமல் என்னோடு கூட வந்து விடுகிறாயா?

மல்லி : (யோசனையாக) உங்களோடு வருவதா?

வஸ: ஆம்; இனியும் நீ இங்கே இருந்து இவர்களிடத்தில் துன்பப்படுவதைவிட, புறப்படு என்னோடு - தஞ்சைக்கு வந்து விடு. அங்கே அதிசீக்கிரம் நம்முடைய கலியானத்தை நடத்தி விடலாம். அதன்பிறகு அவர்கள் உனக்கு ஒரு துன்பமும் செய்ய முடியாது. நீ எதற்கும் பயப்பட வேண்டாம். எனக்கு ஏராளமான ஐசுவரியமிருக்கிறது. உனக்கு யாதொரு குறையுமில்லை. நீ சற்று துணிவாக இந்தக் காரியத்தைச் செய்வாயானால் நீ தப்பித்துக் கொள்ளலாம்.

மல்லி : பிரபுவே! நேற்றைக்கே நான் தங்களுடைய மனைவி என்று சொல்லிவிட்டேனே. இனி இதைப் பற்றி என்னி டம் ஏன் கேட்க வேண்டும்? தங்களுடைய இஷடம்போலச் செய்யலாம். அதற்கு மாறாக நான் ஒன்றும் செய்ய மாட்டேன் - என்று பணிவாகவும் நாணத்தோடும் மறுமொழி கூறினாள்.

“என் உயிரே உன் மனசை அறியவே நான் இவ்ளவு தூரம் சோதனை செய்தேன். கோபிக்காதே! நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். இன்றிரவு அவர்கள் எல்லோரும் நித்திரை செய்யும் போது ராத்திரி மூன்று மணி சுமாருக்கு அவர்களுக்குத் தெரியாமல் எழுந்து நீ சமுத்திரக் கரைக்கு வந்துவிடு. அதற்கு மேல் ஆக வேண்டியதை நான் செய்து கொள்ளுகிறேன். நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்” என்று கூறி, அவளைத் தூக்கி ஆவலுடன் அணைத்து முத்தமிட்டு, "ஒருவர்மேலொருவர் கரை கடந்த காதல் கொண்டுள்ள நம்மைப் பிரிக்க அந்த ஈசுவரனாலும் முடியாது" என்றார்.

அவரது தேனொழுகிய அந்தரங்கமான மொழியைச் செவி கொண்டு பருகியவாறே அந்த ஆநந்தத்தில் அப்படியே இரண்டொரு நிமிஷ நேரம் ஈடுபட்டு நின்ற மல்லிகா, தெளிவடைந்தவளாய் அவர் சொன்னபடியே செய்வதாய் வாக்களித்து, நேரமாயிற்றென்று கூறி, விடை பெற்று குடத்தில் நீரெடுத்துக் கொண்டு அரை மனதோடு புறப்பட்டு நடந்து போய் வீட்டையடைந்தாள்.

★ ★ ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/81&oldid=1230762" இலிருந்து மீள்விக்கப்பட்டது