74
வஸந்தமல்லிகா
இருக்கிறது. அதற்கருகில் ஒசை செய்யாமல் நீ மறைவாக நின்று கொண்டிரு. வேகமாய்ப் போ; அப்புறம் பதில் சொல்லலாம்" என்று கூற, அதைக்கேட்ட மல்லிகா தன்னை மறந்தவளாய் நடந்து அந்த ஜன்னலையடைந்தாள்.
உடனே மோகனராவ் விரைவாக வெளியில் வந்து, சிரித்த முகத்தோடு, கையைத் தட்டி கோனூர் மிட்டாதாரையழைத்து. "என்ன இரண்டு மூன்று தினங்களாகக் கண்ணில் படுவதே அருமையாய்ப் போய்விட்டதே?" என்றார்.
"வேறொன்றுமில்லை. ஒரு அவசர காரியமாக கிராமத்துக்குப் போயிருந்தேன். விடியற்காலமேதான் வந்தேன்” என்றார் கோனூர் மிட்டாதார்.
"வாருங்கள்; காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம். அவசரமாய்ப் போக வேண்டுமோ?" என்று அன்பாக உபசரித்து மொழிந்தார்.
"அவசரமாகத்தான் போக வேண்டும், ஆனால் நான் இன்னும் காப்பி சாப்பிடவில்லை. இனிமேல் வீட்டுக்குட் போவதை விட அதை இங்கேயே முடித்துக் கொண்டு போகிறேன். நீங்கள் கொடுப்பதை வேண்டாமென்று சொல்லுவதேன்" என்று கூற, இருவரும் கலியாணபுரம் ஜெமீந்தார் இறங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்தனர். மல்லிகா நின்ற ஜன்னலுக்கருகில் சுவரின் அப்புறத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அவர்கள் இருவரும் உட்கார்ந்துகொள்ள, வேலைக்காரன் காப்பி, சிற்றுண்டி முதலியவற்றைக் கொணர்ந்து வைத்துவிட்டுச் சென்றான். இருவரும் அவற்றை அருந்திய வண்ணம் சம்பாஷிக்கத் தொடங்கினர். "என்ன விசேஷம் வர வர சீட்டாட்டம் எனக்குக் கசந்துபோய் விட்டது. கிராமத்துக்குப் போய்க் கொஞ்சகாலம் இருந்துவிட்டு வருவது நல்லதென்று நினைக்கிறேன்" என்றார் மிட்டாதார்.
"நல்லதுதான்; வஸந்தராவும் கிராமத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நீங்களிருவரும் சந்தோஷமாகப் பொழுதைப் போக்கலாம். உங்கள் கிராமத்துக்கும் அவருடைய கிராமத்துக்கும் ஒரு மைல் தூரமிருக்குமா?" என்றார் ஜெமீந்தார்.
"அவ்வளவுதானிருக்கும். வஸந்தராவ் நல்ல அதிர்ஷ்டசாலி. இந்த அபாரமான ஐசுவரியம் இவ்வளவு சுலபத்தில் யாருக்குக்